காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளி & மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை ஆகியவற்றின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் உடைய மகன் இசட்.ஏ.கைலானீ, நேற்று (14.12.2018. வெள்ளிக்கிழமை) 05.30 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
துரை என்கிற எஸ்.கே.மொகுதூம் முஹ்யித்தீன் என்பவரது மருமகனாரும்,
இசட்.ஏ.ஷேக் முஹம்மத், டாக்டர் இசட்.ஏ.முஹம்மத் நவாஸ், இசட்.ஏ.முஹம்மத் ஃபைஸல் ஆகியோரின் சகோதரரும்,
கே.ஜெய்னுல் ஆப்தீன், கே.மொகுதூம் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும்,
ஜெ.இசட்.ஆப்தீன், எம்.கே.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மாமனாரும்,
எம்.எம்.ஷாஜஹான், எம்.எம்.ஜஹாங்கீர், எம்.எம்.மக்பூல் அஹ்மத், என்.எஸ்.அஜ்வாத், டாக்டர் பி.ஹஸன் ஆகியோரது மச்சானும்,
மர்ஹூம் அத்திக்கா இப்றாஹீம், அத்திக்கா கே.ஷேக் முஹம்மத், அத்திக்கா கே.ஷேக் சுலைமான் ஆகியோரது மருமகனும்,
எம்.எம்.முஹம்மத் கிதுரு என்பவரது பாட்டானருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நேற்று 11.00 மணியளவில் கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று 16.30 மணியளவில் காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியில், அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
K.M.N.முஹம்மத் அப்துல் காதிர் |