31.12.2018. அன்று காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ள நிலையில் – இதுபோன்ற முகாம்கள் குறித்து மீண்டும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட விளக்கப் பிரசுரம் மீண்டும் சமூக ஊடகம் வாயிலாக அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் ஏற்பாட்டில், காயல்பட்டினம் KMT மருத்துவமனை வளாகத்தில், மெகா | நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில் - (6வது) குருதிக்கொடை முகாம் - இறைவன் நாடினால் - நடைபெறவுள்ளது.
மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் குருதிக்கொடை செய்தால், உலகின் ரத்த தேவை பூர்த்தியாகும் என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) கொள்கைப்படி, காயல்பட்டினம் நகரில் ஒரு சதவீத மக்கள் குருதிக்கொடை செய்யவேண்டும் என்ற இலக்கை அடையவேண்டும் என்ற நோக்கில்இந்த முகாம்கள் - அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
அறியாமையால் நகரில் ஒரு சிலர் - முகாம்கள் மூலம் குருதிக்கொடை செய்யக்கூடாது என தொடர்ந்து பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்ற்னர்.
உலக மருத்துவத்துறையின் அடித்தளத்தை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ள இந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் விதமாகவும், சில அடிப்படை சந்தேகங்களையும் தீர்க்கும் விதமாகவும் - செப்டம்பர் 30 குருதிக்கொடை முகாமிற்கு முன்பு - மெகா | நடப்பது என்ன? குழுமம், துண்டு பிரசுரம் வெளியிட்டது. பொது நலன் கருதி, அதே துண்டு பிரசுரம் - தற்போது மறுவெளியீடு செய்யப்படுகிறது.
டிசம்பர் 31, 2018 அன்று நடைபெறவுள்ள குருதிக்கொடை முகாமில், குருதிக்கொடை செய்யவிரும்புவோர் - கீழ்க்காணும் இணைப்பு மூலம் - முன்பதிவு செய்யலாம்:
https://goo.gl/forms/O5ZvLXGJ1dH3FK403
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 13, 2018; 8:30 am]
[#NEPR/2018121301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|