காயல்பட்டினம் நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராக திரு இ.முருகன் நேற்று பொறுப்பேற்றார்.
விருதுநகர் மாவட்டம் கூமபட்டி கிராமத்தில் - மே 22, 1961 பிறந்த இவர் - 1987 ஆம் ஆண்டு, கொடிக்குளம் பஞ்சாயத்தில் அரசு பணியில் சேர்ந்தார்.
2006 ஆம் ஆண்டு பேரணாம்பேட்டை நகராட்சியின் செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் - விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியபின், காயல்பட்டினம் நகராட்சியின் செயல் அலுவலராகவும் - சில மாதங்கள் இவர் பணியாற்றியுள்ளார்.
திரு பிரேம் ஆனந்த், அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பின்பு, காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் பொறுப்பு - அக்டோபர் முதல் வாரம் முதல் காலியாக இருந்தது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS - கூடுதல் பொறுப்பாக, காயல்பட்டினம் நகராட்சியினையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் - நேற்று திரு முருகன், காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் அடுத்தாண்டு மே மாதம் 31 ஆம் தேதி, ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 11, 2018; 1:00 pm]
[#NEPR/2018121101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|