காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில், 31.12.2018. அன்று காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்க இணையவழியிலும் பெயர் பதிவு செய்திட வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கியுடன் இணைந்து, மெகா | நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் - டிசம்பர் 31, 2018 திங்களன்று - காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம் (BLOOD DONATION CAMP) - இறைவன் நாடினால் - நடைபெறவுள்ளது.
விடுமுறையில் காயல்பட்டினம் வருகை புரியும் வெளியூரில் வாழும் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
மெகா | நடப்பது என்ன? குழுமத்தின் 6வது குருதிக்கொடை முகாமும், இவ்வாண்டு நடத்தப்படும் 3வது குருதிக்கொடை முகாமும் இது!
===========================================
இடம்: கே.எம்.டி. மருத்துவமனை, காயல்பட்டினம்
நாள் / நேரம்: டிசம்பர் 31, 2018 - திங்கள் கிழமை - காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை (இறைவன் நாடினால்)
===========================================
இணையதளத்தில் முன் பதிவு செய்ய இணைப்பு முகவரி:
https://goo.gl/forms/O5ZvLXGJ1dH3FK403
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 9, 2018; 11:00 am]
[#NEPR/2018120902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|