காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சிவன் கோவில் தெரு, அதன் குறுக்குச் சாலைகள், வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் சிவன் கோவில் தெரு (அக்பர்ஷா நகர்) மற்றும் அதன் 1 வது, 2 வது மற்றும் 3 வது குறுக்கு சாலைகளை - ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டிலும்,
வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு முதல் சிவன் கோவில் தெரு மயானம் வரை உள்ள சாலையினை - ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டிலும்,
-- புனரமைக்க காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது.
http://tntenders.gov.in என்ற இணையதளத்தில்,
நவம்பர் 26, 2018 முதல் டிசம்பர் 11, 2018 மாலை 4 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் விபரங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும்,
டிசம்பர் 12, 2018 மாலை 3 மணி வரை - ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கலாம் என்றும்,
டிசம்பர் 12, 2018 அன்று மாலை 3:30 மணிக்கு - ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும்,
காயல்பட்டினம் நகராட்சி தரப்பில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 9, 2018; 8:00 am]
[#NEPR/2018120901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|