காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை ஆட்சேபித்து எழுத்தில் முறையிட்டவர்களுடன் நகராட்சியால் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், “மெகா” | “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுநல ஆர்வலர்கள் சொத்து வரி உயர்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை ஆட்சேபித்து எழுத்தில் முறையிட்டவர்களைச் சந்தித்து நகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் சொத்துவரியை கடுமையாக உயர்த்தி - செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின், 30 தினங்களுக்குள் - நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்கவும் கோரப்பட்டது.
அதனை தொடர்ந்து - இது சம்பந்தமாக, பல்வேறு நடவடிக்கைகளை மெகா | நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டது. குறிப்பாக, நகராட்சிக்கு ஆட்சேபனை மனுக்களை அனுப்ப பொது மக்களை, மெகா | நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிசம்பர் 14) காலை, காயல்பட்டினம் நகராட்சியின் கூட்ட அரங்கில், பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம், நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஆண்கள், பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அந்த கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி, சொத்து வரியை அதிகமாக உயர்த்தும் நகராட்சியின் முயற்சிக்கு - மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.
மேலும் - இந்த அதிகரிப்புக்கு முன்னர், காயல்பட்டினம் நகராட்சி - மாநிலத்திலேயே குறைந்த சொத்துவரி விதிக்கும் நகராட்சியாக இருந்தது; அந்த நிலை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிற மக்களும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
அனைத்து கருத்துகளையும் கேட்டுக்கொண்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 14, 2018; 12:00 pm]
[#NEPR/2018121401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |