31.12.2018. அன்று காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ள நிலையில் – இதுபோன்ற முகாம்கள் குறித்து மீண்டும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், Times Of India நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியும், ஏற்கனவே வெளியிடப்பட்ட விளக்கப் பிரசுரமும் மீண்டும் சமூக ஊடகம் வாயிலாக அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
இறைவன் நாடினால், எதிர்வரும் டிசம்பர் 31, 2018 திங்களன்று - கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஏற்பாட்டில், மெகா | நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில் - குருதிக்கொடை முகாம் நடைபெறவுள்ளது. மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் நகரில் நடத்தப்படும் 6வது முகாம் இது.
இந்த முகாம் குறித்த விழிப்புணர்வு பணிகள் - ஊடகங்கள் வாயிலாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 31 அன்று நகரில் குருதிக்கொடை முகாம் உள்ளது என்று மெகா | நடப்பது என்ன? குழுமம் வெளியிடும் செய்திகள் மூலம் அறியாதவர்கள், இந்த முகாமிற்கு எதிராக - ஒரு சில விபரம் அறியாதோர், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும் தவறான தகவல்கள் மூலம் அறிந்திருப்பர்.
இது போன்ற அடிப்படையற்ற, அறிவீனமான தகவல்களில் உள்ள குளறுபடிகளை விளக்கி - மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலமாக, செப்டம்பர் மாதம் விரிவான துண்டுப் பிரசுரம் பின்வருமாறு வெளியிடப்பட்டது:-
டிசம்பர் முகாம் நெருங்கும் நேரத்தில், மீண்டும் தங்கள் பொய்யான, அடிப்படையற்ற பிரச்சாரத்தை - ஒரு சிலர் துவக்கியுள்ளனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் தற்போது பரப்பும் தகவலில் ஒன்று TIMES OF INDIA நாளிதழ், 24-4-2017 அன்று, No coordination between blood banks and hospitals, 6 lakh litres of blood wasted in five years! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தி. அந்த செய்தியின் சாராம்சம் என்னவெனில் - மருத்துவமனைகளுக்கும், ரத்த வங்கிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்திய ரத்த வங்கிகள், ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் லிட்டர் ரத்தத்தை வீணாக்கியுள்ளன!
ரத்த வங்கிகள் குறித்த புள்ளிவிபரம் வழங்கும் அரசுத்துறை, அதற்கான காரணங்களையும் வெளியிட்டிருந்தது. எவ்வளவு ரத்தம் வீணடிக்கப்பட்டது என்று செய்தி வெளியிட்ட நாளிதழ், எதற்காக அந்த ரத்தம் வீணடிக்கப்பட்டது என்ற விபரத்தை வெளியிடவில்லை.
அந்த காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
The reasons for discard of blood and blood components are as follows:-
i) Reactivity for infections ( Malaria, Syphilis, HIV, Hepatitis B, Hepatitis C)
ii) Expiry due to outdating, especially for platelets which have a short shelf life of only 5 days.
iii) Deterioration during storage in the form of discoloration, haemolysis, bacterial contamination.
iv) Not meeting quality parameters after collection and production
v) Non-completion of blood collection in requisite quantities due to donor reactions.
மேலும் - இந்திய ரத்த வங்கிகளில், புள்ளிவிபரங்கள்படி, வீணான ரத்தம் சுமார் 6 சதவீதம் ஆகும். இது உலகளவில் - வளர்ந்த நாடுகளில் கூட - தவிர்க்க முடியாத வீணாகும் ரத்தத்தின் சதவீதத்திற்கு ஒப்பானது. [கனடா நாட்டில் ஆண்டொன்றுக்கு வீணாகும் ரத்தம் சுமார் 9.3 சதவீதம்; ஆஸ்திரேலியா நாட்டில் ஆண்டொன்றுக்கு வீணாகும் ரத்தம் சுமார் 5.7 சதவீதம்].
இந்த செய்தியை TIMES OF INDIA நாளிதழ் வெளியிட்ட உடனேயே, மருத்துவ துறை மூலமாக இதற்கான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. [Ethics that Apply to Blood Banks, Apply to Newspapers as Well. How About Some Responsible Reporting by the Print Media?; Global Journal of Transfusion Medicine AATM | Published by Wolters Kluwer ‑ Medknow; 2017]
அந்த விளக்கத்தில், TIMES OF INDIA பயன்படுத்திய தலைப்பு, பொறுப்பற்றது என்றும், இதே செய்தியை THE HINDU நாளிதழ் பொறுப்பான தலைப்பு (BLOOD WASTAGE DROPS SHARPLY, REVEALS RTI QUERY) கொடுத்து வெளியிட்டது என்றும், இது போன்ற செய்திகளை கனடா நாட்டு நாளிதழ் எவ்வாறு வெளியிட்டது (“Blood‑discard rate starting to decline from peak of 9.3%: Canadian Blood Services dated Fri Jul 31, 2015; http://www.metronews.ca/news/calgary/2015/07/30/blood-discard-rate-starting-to-decline-from-peak-of-9-3-canadian-blood-services.html) என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TIMES OF INDIA வெளியிட்ட இந்த மிகைப்படுத்தப்பட்ட செய்திதான் தற்போது, முழு விபரம் அறியாத சிலரால், குருதிக்கொடை முகாம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Global Journal of Transfusion Medicine வெளியிட்ட முழு விளக்கம் (4 பக்கங்கள்) இணைக்கப்பட்டுள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 18, 2018; 8:30 am]
[#NEPR/2018121801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|