செய்தி: பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது! “நடப்பது என்ன?” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மிக அவசியமாக மிக அவசரமாக மாறி வரும் சேவை posted bymackie noohuthambi (colombo)[21 December 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46345
சான்றிதழ்கள் எதுவானாலும் அவற்றை பெறுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.
வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு நமது ஊருக்கு வந்தால் இந்த சான்றிதழ்கள் எடுக்கவே அவர்கள் லீவு நாட்கள் முடிந்து விடுகிறது. மிக அலுத்துப் போய் பேசுவார்கள் உண்மை நிலையும் அதுதான்.
இப்போது இந்த சேவை நமது கைக்கு எட்டிய தூரத்தில் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி மட்டுமல்ல ஒரு பெரிய சாதனையும்தான். இந்த சேவையை இங்கு ஏற்படுத்துவதற்காக முயற்சித்தவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல கூலியை வழங்குவானாக. இந்த சேவை இங்கு சொல்லப் பட்டுள்ளபடி துரிதமாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள உதவுமானால் அது ஒரு பெரிய மாற்றத்தின் அறிகுறிதான்.
ஜப்பான் நாட்டு முதல்வர் நமது நாட்டுக்கு விஜயம் செய்த நேரமது. புல்லெட் ரயில் விஷயமாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அந்த முதல்வர் நமது பிரதமர் ஏதோ ஒரு சாதாரண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்று மணி நேரத்தை செலவிட்டாராம். ஒரு பெரிய நாட்டின் பிரதமர் இப்படி ஒரு அற்பமான நிகழ்ச்சிக்காக மூன்று மணி நேரத்தை வீணடிக்க முடிந்தபோது இங்கு புல்லெட் ரயில் தேவை இல்லை என்று மனம் வெதும்பி பேசினாராம்.
நேரத்தின் அருமை பெறுமதி ஜப்பான் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
எல்லா மொழிகளிலும் உள்ள REST ஓய்வு என்ற வார்த்தை ஜப்பான் அகராதியில் DICTIONARY யில் இல்லை என்று வசந்த குமார் MLAஅவர்கள் சொல்கிறார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.
நமது நேரங்கள் எப்படி எல்லாம் வீணாகிறது என்பதற்கு இந்த சான்றிதழ்களுக்காக அலைபவர்களுக்கு நன்கு தெரியும். தடவை ஐஸ் கோல்ட். அல்லாஹ்வும் காலத்தின் மீது சத்தியமாக என்று சூராவில் சொல்கிறான். உலமாக்கள் இதற்கு விளக்கம் சொல்லும்போது காலத்தின் அருமை பற்றி சொல்கிற சூரா இது என்கிறார்கள்.TIME AND TIDE WAIT FOR NO MAN
இந்த சேவை துரிதமாக செயல்பட்டு மக்களின் பாராட்டை பெறவும் மக்கள் நன்கு அந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் வாழ்த்துகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross