செய்தி: திருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்! போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன? குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கடுகு சிறிது காரம் பெரிதும் posted bymackie noohuthambi (colombo)[01 January 2019] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46350
வாழ்த்துக்கள். நீண்ட நெடிய போராட்டத்துக்கு இந்த சிறிய இளைஞர் கூட்டம் செய்த அற போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
திருச்செந்தூரில் நடைபெற்ற இந்த பயணத்தின் போராட்டத்தின் ஆரம்ப நாளில் நானும் அங்கு சென்று எனது கை சேருடன் கலந்து கொண்ட ஞாபகம் வருகிறது. ஆனால் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியுமா என்ற ஐயம் எல்லாம் எழுந்தது. ஏனென்றால் ஆட்சியாளர்களை விட அதிகாரிகளின் கை வலுப் பெற்று இருக்கும் காலம் இது. ஆட்சி தலைவர்கள் என்ன நினைத்தாலும் அதை அமுல்படுத்தவேண்டியவர்கள் அதிகாரிகள்தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மை இந்த இளைஞர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதை நான் பார்க்கிறேன்.
100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவின் சிற்பிகளாக அவர்களை மாற்றி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொல்வார். நபிகள் நாயகம் அவர்கள் YAA MAUSHARASH SHABAAB என்று இளைஞர்களை விழித்துதான் பேசுவார்கள்.
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
நாளை நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்
நீ எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்
நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்
நீ நடப்பதற்கு பாதை தேடாதே...
நீ நடந்தால் அதுவே பாதையாகும்
இவை எல்லாம் வெறும் வசனங்கள் அல்ல நிதர்சன உண்மைகள் என்பதை நிரூபித்துள்ள இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross