Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:23:10 AM
சனி | 2 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1920, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0715:2818:0219:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:32
மறைவு17:55மறைவு18:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21222
#KOTW21222
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 1, 2019
திருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்! போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன? குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3387 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், வழித்தடம் மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் மீது “காயல்பட்டினம் வழி” எனும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றுள்ளது. மெகா | நடப்பது என்ன?” அமைப்பின் அனுசரணையில் – போக்குவரத்துக் கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக காயல்பட்டினம் வழியை புறக்கணித்து அடைக்கலாபுரம் வழியாக செல்லும் பிரச்னை பல ஆண்டுகளாக நிலவுகிறது.

இது குறித்து - கடந்த இரண்டு ஆண்டுகளாக, மெகா | நடப்பது என்ன? குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

// கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுடன் சந்திப்பு

// சென்னையில் போக்குவரத்து துறை அரசு செயலருடன் சந்திப்பு

// தொடராக 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பு

// மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பேருந்து நிலையங்களில் அறிவிப்பு பலகை நிறுவுதல்

இதன் தொடர்ச்சியாக, சில வாரங்களுக்கு முன்பு - போக்குவரத்து ஆணையர், திரு சமயமூர்த்தி IAS அவர்களை மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சென்னையில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது - காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிக்கும் பிரச்னை முழுமையாக தீரவில்லை என்பது எடுத்துரைக்கப்பட்டது.

அதன் பயனாக, போக்குவரத்து ஆணையர் - கீழ்க்காணும் உத்தரவுகளை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பிறப்பித்தார்.

(1) அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு - காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு / தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

(2) காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு / தனியார் பேருந்துகளில் வழி காயல்பட்டினம் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டவேண்டும்

(3) மெகா அமைப்பினர், தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் பிரதிநிதிகளுடான சந்திப்புகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யவேண்டும்

போக்குவரத்து ஆணையரின் ஆணை அடிப்படையில், டிசம்பர் 26 அன்று - காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பேருந்துகளில், வழி காயல்பட்டினம் என ஸ்டிக்கர் ஒட்டப்படும் பணிகளை, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூத்த அலுவலர் திருமதி பாத்திமா பர்வீன் - வீரபாண்டியன்பட்டினம் சந்திப்பில் துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக - நேற்று (டிசம்பர் 28), வழி காயல்பட்டினம் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்தது. அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் முன்னிலையில், மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் இப்பணிகளை மேற்கொண்டனர்.











வழி காயல்பட்டினம் ஸ்டிக்கர், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அனைத்து பேருந்துகளிலும் அடுத்த சில நாட்களில் - இறைவன் நாடினால் - ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர்களுக்கான அனுசரணையை மெகா | நடப்பது என்ன? குழுமம் செய்துள்ளது.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: டிசம்பர் 29, 2018; 8:30 am]
[#NEPR/2018122901]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கடுகு சிறிது காரம் பெரிதும்
posted by mackie noohuthambi (colombo) [01 January 2019]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46350

வாழ்த்துக்கள். நீண்ட நெடிய போராட்டத்துக்கு இந்த சிறிய இளைஞர் கூட்டம் செய்த அற போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

திருச்செந்தூரில் நடைபெற்ற இந்த பயணத்தின் போராட்டத்தின் ஆரம்ப நாளில் நானும் அங்கு சென்று எனது கை சேருடன் கலந்து கொண்ட ஞாபகம் வருகிறது. ஆனால் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியுமா என்ற ஐயம் எல்லாம் எழுந்தது. ஏனென்றால் ஆட்சியாளர்களை விட அதிகாரிகளின் கை வலுப் பெற்று இருக்கும் காலம் இது. ஆட்சி தலைவர்கள் என்ன நினைத்தாலும் அதை அமுல்படுத்தவேண்டியவர்கள் அதிகாரிகள்தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மை இந்த இளைஞர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதை நான் பார்க்கிறேன்.

100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவின் சிற்பிகளாக அவர்களை மாற்றி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொல்வார். நபிகள் நாயகம் அவர்கள் YAA MAUSHARASH SHABAAB என்று இளைஞர்களை விழித்துதான் பேசுவார்கள்.

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
நாளை நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்

நீ எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்
நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்

நீ நடப்பதற்கு பாதை தேடாதே...
நீ நடந்தால் அதுவே பாதையாகும்

இவை எல்லாம் வெறும் வசனங்கள் அல்ல நிதர்சன உண்மைகள் என்பதை நிரூபித்துள்ள இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved