kayalpatnam.com இணையதள ஆசிரியர் குழுவினருள் ஒருவரான ஹாஃபிழ் எம்.என்.புகாரீ உடைய சிறிய தந்தை - *காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த பி.அஹ்மத் ரஃபீக்,* தனது சென்னை பயணத்தின்போது, உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை 02:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 58. அன்னார்,
மர்ஹூம் எம்.எம்.புகாரி அவர்களின் மகனும்,
மர்ஹூம் செய்யித் இஸ்மாஈல் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் பி.மஹ்மூத் நெய்னா, மர்ஹூம் பி.அப்துல் ஜலீல் ஆகியோரது சகோதரரும்,
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், எஸ்.ஐ.அபூபக்கர், மர்ஹூம் எஸ்.ஐ.அஹ்மத் மீரான், எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபி, எஸ்.ஐ.அப்துல் மத்தீன், எஸ்.ஐ.அப்துல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும்,
Z Fashion ஏ.ஆர்.முஹம்மத் ஜியாத், ஏ.ஆர்.அஹ்மத் ஜாபிர், ஏ.ஆர்.அப்துல் ஜலீல், ஹாஃபிழ் ஏ.ஆர்.முஹம்மத் நளீம், ஏ.ஆர்.அஹ்மத் தாஹிர் ஆகியோரின் தந்தையும்,
ஹாஃபிழ் எம்.என்.புகாரி, எம்.என்.அப்துல் காதிர், எம்.என் செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் சிறிய தந்தையும்,
எம்.இசட்.ஜாஹித் புகாரி, ஏ.ஜே.அஹ்மத் ரஃபீக் ஆகியோரது தந்தையரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 09:00 மணிக்கு காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |