காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த சொத்து வரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தொடர் முயற்சியால் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
கடந்த செப்டம்பர் மாதம், காயல்பட்டினம் நகராட்சி மூலம் விதிக்கப்படும் சொத்து வரியினை பல மடங்கு அதிகரித்து, அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து - பல்வேறு நடவடிக்கைகளை, மெகா | நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டது.
// நகரின் அனைத்து ஜமாஅத்துகள் / ஊர் நல குழுக்கள் / கோவில் / தேவாலய நிர்வாகிகள் ஆகியோரின் ஆட்சேபனை கையெழுத்துக்கள் பெறப்பட்டு, நகராட்சியிடம் - மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
// தங்கள் தனிப்பட்ட ஆட்சேபனையை தெரிவிக்க பொது மக்களுக்கு மெகா | நடப்பது என்ன? குழுமம் வைத்த வேண்டுகோளை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள், நகராட்சியில் தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்தனர்.
// மேலும் - மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி அதிகரிக்கப்பட்டுள்ள சொத்து வரியினை நகராட்சி குறைக்கவில்லை என்றால், பொது மக்கள் எந்த வரியும் செலுத்தமாட்டார்கள் என்ற எதிர்ப்பு வாசகங்கள்
அடங்கிய சுவரொட்டிகள், மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் நகரெங்கும் ஒட்டப்பட்டது._
// டிசம்பர் மாதம், காயல்பட்டினம் நகராட்சியில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துகேட்பு கூட்டத்திலும், மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம், கடுமையான எதிர்ப்பு மீண்டும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் - உயர்த்தப்பட்ட சொத்துவரி விகிதத்தை காயல்பட்டினம் நகராட்சி குறைத்துள்ளது.
A மண்டலம் பகுதிகளுக்கு 50 காசாக இருந்த சொத்துவரி 150 காசாக உயர்த்தப்பட்டிருந்தது; ஆட்சேபனைகளை தொடர்ந்து, தற்போது 100 காசாக குறைக்கப்பட்டுள்ளது.//
B மண்டலம் பகுதிகளுக்கு 25 காசாக இருந்த சொத்துவரி 80 காசாக உயர்த்தப்பட்டிருந்தது; ஆட்சேபனைகளை தொடர்ந்து, தற்போது 70 காசாக குறைக்கப்பட்டுள்ளது.//
C மண்டலம் பகுதிகளுக்கு 19 காசாக இருந்த சொத்துவரி 60 காசாக உயர்த்தப்பட்டிருந்தது; ஆட்சேபனைகளை தொடர்ந்து, தற்போது 40 காசாக குறைக்கப்பட்டுள்ளது.//
இந்த தகவலை - மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் இன்று வழங்கிய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு முருகன், திருத்தப்பட்ட கட்டணத்தை - அரசு கெஜெட்டில் பதிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 2, 2019; 3:00 pm]
[#NEPR/2019010201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|