இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப் உடைய தாயார் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த கே.எம்.ஹவ்வா பீவி, இன்று 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 79. அன்னார்,
மர்ஹூம் எம்.என்.கிதுரு முஹ்யித்தீன் அவர்களின் மகளும்,
மர்ஹூம் ஏ.பீ.அப்துர் ரஹ்மான் அவர்களின் மனைவியும்,
முத்துச் சுடர் மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.நூஹுத் தம்பி ஜுமானீ அவர்களின் மச்சியும்,
மர்ஹூம் ஸாமு ஷிஹாபுத்தீன் ஆலிம், குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் மர்ஹூம் ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், குருவித்துறைப் பள்ளியின் துணைத்தலைவர் என்.எஸ். நூஹ் ஹமீத் ஆகியோரின் மருமகளும்,
ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் நூஹ், கே.எம்.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் சகோதரியும்,
ஏ.ஆர்.முஹம்மத் அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப், ஏ.ஆர்.முஹம்மத் இஸ்மாஈல், ஏ.ஆர். கலீலுர் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும்,
எம்.எஸ். நூஹ் சாஹிப், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோரின் மச்சியும்,
ஏ.அப்துஸ் ஸமத், ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர் ரஹ்மான், எம்.ஐ.கபீர், பி.ஏ.முஹம்மத் சாலிஹ் , மஃஷூக் ரஹ்மான், அப்துர் ரஹ்மான் ஆகியோரது தந்தையரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 21:00 மணிக்கு குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|