காயல்பட்டினம் நகராட்சியில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்டில்) வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களின் வார்டுகளை மறுவரையறை செய்ய - தமிழக அரசு, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களும் - கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், மாதிரி மறுவரையறை விபரங்களை வெளியிட்டன.
காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்ட வார்டுகள் விபரத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்பதனை சுட்டிக்காட்டி - மெகா | நடப்பது என்ன? குழுமம் உட்பட நகரின் பல்வேறு அமைப்புகள், எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இறுதி செய்யப்பட்ட வார்டுகள் விபரங்களை, தமிழக அரசு தற்போது அரசு கெஜெட்டில் வெளியிட்டுள்ளது. அதில் - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுவரைமுறை குறித்து பொது மக்கள் சார்பாக வழங்கப்பட்ட ஆட்சேபனைகளை காயல்பட்டினம் நகராட்சி ஏற்றுக்கொள்ளாமல், டிசம்பர் 2017 இறுதியில் வெளியிட்ட அதே வார்டுகள் எல்லைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 2017 இல் காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்ட வார்டுகள் விபரமும், தற்போது அரசு கெஜெட்டில் வெளியியாகியுள்ள வார்டுகள் விபரமும் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 26, 2018; 8:30 am]
[#NEPR/2018122601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|