Re:... posted byசாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[06 February 2019] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46377
விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக நாங்கள் வந்தோம்.
தள்ளுவண்டிக் காரர்களின் வாழ்வாதாரம் சிதைந்து போனது. அவர்களை காண பரிதாபமாக இருந்தது.
அடிபட்ட கார், தள்ளு வண்டி ஆகியவற்றுக்கே இவ்வளவு சேதாரம் என்றால் , அடி கொடுத்த பைக்குக்கு எவ்வளவு சேதாரம் இருக்கும் என்று அங்கும் இங்கும் தேடிப்பார்த்தால் , பைக்கை காணவில்லை.
என்னப்பா இது .. ஆச்சரியமாக இருக்கே ஒருவேளை ஜின்னுடைய வேலையாக இருக்குமோ என்று விசாரித்தால் , ஒரு 150 மீட்டருக்கு அப்பால் , அனாதையாக அந்த பைக் நின்றுக்கொண்டு இருந்தது. ஆக்ஸிடன்ட் பண்ணிவிட்டு ஓடப்பார்த்தவனை விரட்டி சென்று பிடித்து உள்ளார்கள்.
இதில் ஒரு நகைச்சுவை என்னென்ன , விபத்து ஏற்படுத்திய அந்த பையன் , சிறு காயத்துடன், நல்ல தெம்பாக கெஞ்சிக்கொண்டு இருந்தான். பணம் வேணா தந்து விடுக்கிறேன், விட்டு விடுங்கள்… விட்டு விடுங்கள் என்று.
அவனுடைய நிலையையும் , அதிகார கெஞ்சலையும் கண்டு யாருக்குமே அவன் மீது பரிதாபம் வரவே இல்லை.
தற்செயலாக அங்கு போலீசார் வருவதை எப்படி கண்டானோ தெரியவில்லை , உடை மரத்துக்கு பின்னாடி தடார் என்று படுத்து, பயங்கரமாக அடிபட்டது போல சீன் போட ஆரம்பித்து விட்டான் .
அப்பறம் என்ன .. எங்களுக்கே அவன் மேல் பரிதாபம் வந்து விட்டது, போலீசுக்கு வராதா..? பிரமாத நடிப்பு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross