செய்தி: மக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மதவாதமா? மிதவாதமா? posted bymackie noohuthambi (kayalpatnam)[18 March 2019] IP: 223.*.*.* India | Comment Reference Number: 46387
மாபெரும் ஜனநாயக திருவிழா என்று நாளிதழ்கள் அறிவித்தாலும் இது ஒரு பணநாயக திருவிழா என்பது வெள்ளிடைமலை.
நாள்தோறும் கைப்பற்றப்படும் கணக்கில் வராத பல கோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப் படுகின்றன அப்படி பறிமுதல் செய்யப்பட பணங்கள் என்ன ஆனது என்பது எல்லா தேர்தலிலும் கேள்விக்கு குறியாகவே இருக்கிறது. கூட்டணிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது முஸ்லீம் லீக் உறுப்பினரைத்தவிர வேறு யாரும் முஸ்லிம்கள் இல்லை என்பது மனதுக்கு சங்கடமாக உள்ளது மத்திய சென்னையில் தஹ்லான் பாக்கவி போட்டி இடுகிறார்கள். சகோதரர் நவாஸ் கனி அவர்களும் தஹ்லான் பாக்கவி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் நடுநிலை வகிக்கும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிமுகவில் உள்ள முஸ்லிம்கள் திமுகவில் உள்ள முஸ்லிம்கள் பாமகவில் உள்ள முஸ்லிம்கள் தமாகவில் உள்ள முஸ்லிம்கள் இப்படி எல்லா முஸ்லிம்களும் அவரவர்கள் சார்ந்துள்ள வேட்பாளர்களுக்குத்தான் வாக்கு சேகரிப்பார்கள்.
ஆனாலும் இப்போதுள்ள கேள்வி மத்தியில் ஆளும் மதவாத ஆட்சி தொடரவேண்டும் அல்லது அந்த ஆட்சியை அகற்றி ஒரு மிதவாத ஆட்சி அமைய வேண்டுமா என்ற கேள்விதான் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எனவே மக்கள் நமது நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கும் கனிமொழி கருணாநிதி அவர்களை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதும் இராமநாதபுரத்தில் வேட்பாளராக நிற்கும் நவாஸ் கனி அவர்களை ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தேர்தல் வரும்போது அதற்கான வியூகங்களை வகுக்கலாம்.
சீட்டுக்கு கூட்டுக்கு பணம் - பணத்துக்காக ஓட்டு - என்று தமிழக அரசியல் தலைவர்களே தங்களை நிறம் மாறும் பச்சோந்திகளாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த தேர்தல் களத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லாட்சியை மலர செய்வானாக. வாக்களிக்கும் தினத்தில் முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே குரலில் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய து ஆ நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு சொல்லி தந்தது
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINA MANN LAA YAKHAAFUKA VA LAA YARHAMNAA ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross