செய்தி: குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார்! பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம்!! பெருந்திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தாய்மார்கள் உள்ளங்களில் நிறைந்து நிற்கும் மருத்துவர் posted bymackie noohuthambi (kayalpatnam)[23 April 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46393
2019 இல் நின்றுகொண்டு தம்பி டாக்டர் அவர்களின் மகத்துவத்தை பேசினால் இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அது புரியாது. 50 ஆண்டுகளுக்கு பின் சென்று பார்த்தால் அவர்கள் இல்லாது வேறு ஒரு குழந்தை மருத்துவரை யாருக்கும் அடையாளம் காட்ட முடியாது .
கையில் குழந்தையை வைத்துக் கொண்டு பாளையம்கோட்டையில் நமதூர் பெண்கள் சென்றால் அவர்கள் நிச்சயம் தம்பி டாக்டர் அவர்களை பார்க்கவே வந்திருப்பார்கள். அப்படி ஒரு ஆளுமை மிக்க மருத்துவர் ஆனால் அமைதியே உருவானவர். அவர் சிரிக்கும்போது அழுகின்ற குழந்தையும் சிரிக்கும். அதைக் காணும் தாய்க்கும் உள்ளம் குளிரும்
நமதூரில் நடைபெற்ற ஒரு விழாவில் மருத்துவர்களை கௌரவிக்கும் அந்த விழாவில் தம்பி டாக்டர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
சாதனையாளர்களை இனம் கண்டு அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களை பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்ற எனது அழுத்தமான பதிவுகளை இங்கே மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் பெயரால் ஒரு நினைவு மன்றம் கட்டப்பட்டு அவர்கள் பெயரால் அந்த மன்றம் அழைக்கப் படவேண்டும். அங்கு சிறந்த மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும். ஊரிலுள்ள புரவலர்கள் அதற்கு ஆவன செய்ய வேண்டும். இந்த மன்றம் நமதூர் மக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள KMT மருத்துவமனையில் ஏற்படுத்தலாம். அல்லது பொதுமக்களிடம் வசூல் செய்து அவர்கள் பங்களிப்பும் அதில் இருக்க செய்யலாம் .
தம்பி டாக்டர் பற்றி ஒரு சுவையான செய்தியை கேள்விப் பட்டேன் அவர்கள் அரபுநாட்டில் பணி செய்வதற்காக ஒரு காலத்தில் அங்கு சென்றார்கள்.ஆனால் குறைந்த கால இடைவெளியில் அவர்கள் நாடு திரும்பி விட்டார்கள் . ஏன் அப்படி என்று அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம். தினசரி எத்தனை குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தேன் எத்தனை புது புது வியாதிகள் சவால்கள் எல்லாவற்றையும் மிக துணிச்சலுடனும் புத்துணர்ச்சியுடனும் நான் தீர்த்து வைத்தேன். இந்த நாட்டில் வந்து ஒரு நோயாளியை மட்டுமே பார்ப்பதும் தொடர்ந்து ஒரே சிகிச்சையை அளிப்பதும் எனக்கு போரடிக்கிறது, திரும்பி வந்துவிட்டேன் என்று சொன்னார்களாம். அங்கு கொட்டிக் கிடைக்கும் பணத்தை அள்ளிக் கொண்டுவருவதை விட இங்கு கொட்டிக் கிடைக்கும் அன்பை அள்ளிக் கொள்வதில் அவர்களுக்கு இருந்த பிரியம் எப்படி?
சின்னக் குழந்தைகளிடம் ஒரு டாக்டர் பெயர் சொல் என்றால் உடனே தம்பி டாக்டர் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் பிரபல்யம் அடைந்திருந்தார்கள். தாய்மார்களும் அப்படியே சொல்வார்கள் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொள்வானாக அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக ஆமீன் ..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
HE ALONE LIVES FOR OTHERS , OTHERS ARE MORE DEAD THAN ALIVE .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross