செய்தி: 18 வயதுக்குக் குறைவானோர் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்குத் தண்டனை! மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒரு மூத்த சகோதரன் பேசுகிறார்...இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது posted bymackie noohuthambi (kayalpatnam)[30 April 2019] IP: 223.*.*.* India | Comment Reference Number: 46404
காவல் துறையிலிருந்து கலந்து கொண்ட ஒரு அதிகாரியின் அதிகார தோரணை இங்கு இல்லை . குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் பேசுகின்ற தொனி ஒலிக்கிறது .
அவரது ஒவ்வொரு வார்த்தையும் அவரது உள்ளத்தின் வெளிப்பாடு . ஒரு தந்தையின் கண்டிப்பும் ஒரு சகோதரனின் அரவணைப்பும் அவரது பேச்சில் வெளிப்படுகிறது .
மரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை ஆனால் மரணத்தை நாமே சென்று முன் கூட்டியே வரவழைத்துக் கொள்கிறோம் . வாகன விபத்தின் தற்கால வேகம் அதைத்தான் நமக்கு சொல்கிறது.
காவல்துறை அதிகாரிகளை பார்த்தாலே பயம் ஏற்படும் ஆனால் இந்த அதிகாரி அவர்களின் புத்திமதிகள் அழைக்காமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து அறவுரையாற்றிய நமது சகோதரருக்கு நமது வாழ்த்துக்கள்.இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது.
HATS OFF SIR .
காவல்துறை நமக்கு நண்பன் என்ற அருமையான வெளிப்பாட்டை இங்கே ஏற்படுத்தியுள்ள அதிகாரி அவர்கள் போல் எல்லா காவல்துறை அதிகாரிகளும் இருந்தால் விபத்துக்களை தடுக்க முடியும். இளைஞர்களுக்கு இந்தக்காலத்தில் தேவைப்படுவதெல்லாம் அரவணைப்புதான். ஆனால் அவர்களுக்கு விபத்துக்களின் பின் விளைவுகளை இப்படி விழிப்புணர்ச்சியுடன் போதித்தால் அவர்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள்.
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross