Re:...மாஸ்கோவில் மழை பெய்தால் மதராஸில் குடை பிடிப்பார்களா posted bymackie noohuthambi (kayalpatnam)[04 June 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46424
ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
ஒரு தவறான முன்னுதாரணத்தை ஆலிம் அவர்கள் முன்னெடுத்து செல்கிறார்கள் ஆனாலும் காலமாற்றத்தின் வேகம் அதன் சுழற்ச்சி இப்போது பிறையை புறக்கண்களால் பார்க்க தேவை இல்லை கணினியை வைத்தே கணக்கு பண்ணலாம் என்ற நிலைக்கு உலமாக்களின் சிலர் சென்று விட்ட பிறகு ஆலிம் அவர்களின் சர்வதேச பிறை விஷயம் குளிர் விட்டு போய்விட்டது.
ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற நிலைக்கு நாம் எல்லாம் தள்ளப் பட்டுவிட்டோம் நமக்கு இது பழகி விட்டது இன்னும் சொல்லப் போனால் மூன்று நாள் பெருநாள் இன்று இரண்டுநாள் பெருநாளாக சுருங்கி விட்டது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
நோன்பு எனக்குள்ளது அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என்றும் நானே கூலியாக இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதாக உலமாக்கள் சொல்கிறார்கள். எனவே கூலி தரும் எஜமானிடம் இந்த விஷயத்தை விட்டு விடுவோம். தர்க்கங்களை தவிர்ப்போம் .
ஆனாலும் ''மாஸ்கோவில் மழை பெய்தால் மதராஸில் குடை பிடிப்பவர்கள்'' என்று கம்யூனிஸ்ட்களை முன்பு தமாஷாக பேசுவார்கள் அது இப்போது உண்மைதானோ என்று நம்மை சிந்திக்க வைக்கிறது
எது எவ்வாறாயினும் நமது ஈகை திருநாள் வாழ்த்துக்களை முஸ்லிம்கள் எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் , ஈத் முபாரக் ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross