Re:...ஹிட்லரின் மறுபதிப்பு posted bymackie noohuthambi (kayalpatnam)[17 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46456
ஹிட்லரின் சர்வாதிகாரம் எப்படி ஒரு இனத்தை அளிப்பதற்காக தலைதூக்கியது அதே பாணியில் மோடி அவர்களின் இஸ்லாமிய இனத்தின் உரிமைகளை வேரோடு பிடுங்கி எறியும் வகையில் போய்க்கொண்டிருக்கிறது.
முத்தலாக் எதிர்ப்பு சட்டம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்ற தீர்ப்புக்கு மறைமுகமான சூத்திரதாரி இப்போது குடியுரிமை என்ற ஒரு முஸ்லீம் விரோத சட்டத்தை இயற்றியுள்ளார். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மகா சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்று தெரியாமல் ஆட்டம் போடுகிறார்.
நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் தனக்கு miruka பலம் இருக்கிறது என்ற ஒரு மமதையில் தான் நினைத்ததை எல்லாம் சாதித்து விடலாம் என்று மனப் பால் குடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. மஹாராஷ்டிராவில் தன் கையைக் கொண்டே தன் கண்ணை குதிக்க கொண்டு அவதி பட்டவர் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி பார்க்கிறார்.
இயற்கையாகவே முஸ்லிம்கள் அமைதியானவர்கள் என்ற எண்ணத்தில் தான் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் முஸ்லிம்கள் சும்மா காய் kattik கொண்டு vedikkai paarthuk kondiruppaarkal என்று கனவு காண்கிறார். ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயம் மட்டுமல்ல maatru matha sakothararkalum kooda இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து முஸ்லிம்களுக்கு தோல் கொடுக்க வந்திருக்கிறார்கள்.
நல்ல நண்பன் நல்ல மனைவி இவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது, சிரிப்பும் செழிப்பும் நிறைந்த நேரத்தில் அடையாளம் தடுமாறிவிடும். ஆனால் சோதனையும் வேதனையும் நிறைந்த நேரத்தில் அடையாளம் தெளிவாக தெரிந்து விடும்.
தமிழ்நாடு அரசின் நீல சாயம் வெளுத்து விட்டது. மோடியின் எல்லா உணர்வுகளுக்கும் வடிகால் அமைத்துக் கொடுக்கும் ஒரு அசிங்கமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து இந்தியாவில் வாழும் தமிழர்கள் நிலை என்ன என்று அவர்கள் சிறிதும் சிந்திக்காமல் மோடிக்கு ஜால்றா அடித்து கொண்டிருக்கிறார்கள் .
மியான்மரில் இருந்து குடி பெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்கள்
ரோஹிங்கியாக்களுக்கு என்ன கத்தி...போகின்ற போக்கில் அடுத்தது COMMON CIVIL CODE சட்டமாக்கப் பட்டு விடும்போல் தெரிகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய இப்படி பட்ட ஆர்ப்பாட்டங்கள் காலத்தின் கட்டாயம் எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நமது எதிர்ப்புக்களை தெரிவிப்போம் வாருங்கள்.
அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது. நள்ளிரவிலேயே இந்த சர்வாதிகாரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்ற சரித்திரம் நமக்கு முன்னால் உள்ளது . உத்தவ் தாக்ரே போன்ற இந்துத்வ மனம் கொண்டவர்களே இந்த ஆட்சியை கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross