Re:...ஊர்வலங்களுக்கு ஒளி கொடுத்தவர் posted bymackie noohuthambi (kayalpatnam)[17 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46457
அப்துர் ரஹ்மான் காக்காவை 2020 இன் விடிவுக்கு காத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு அவர்கள் சேவை தெரிந்திருக்க இருட்டில் ஒரு திருமண ஊர்வலமோ அல்லது ஒரு பைத் ஊர்வலமோ செல்லவேண்டுமானால் நாம் அழைப்பது நாடுவது அப்துர் ரஹ்மான் காக்க அவர்களைத்தான்.
அது காஸ் லைட்டுக்களை நம்பி இருந்த இருந்த காலம் அது அப்போது ஊருக்கே அவர்கள் வெளிச்சம் கொடுத்தவர்கள். அவர்கள் மக்களை இப்படி உருவாக்கி ஊர் மெச்ச வாழ செய்வதற்கு அவர்கள் கொடுத்த விலை அவர்கள் இளமை. தனது இளமையை தொலைத்து விட்டு இந்த காஸ் லைட் வாழ்க்கையை தனதாக்கி கொண்டவர்கள். ஆனாலும் அவர்கள் கால மாற்றாது ஏற்றாற்போல் தனது தொழிலையும் மாற்றிக் கொண்டார்கள்.
இப்போது எப்போதும் அவர்கள் ஸாலிஹ் காஸ் லைட் என்று அறிவிப்பு பலகை தொங்கவிடப் பட்டிருக்கும் நான் கூட அங்கு சென்றால் உட்காருவதற்கு ஒரு நாற்காலி கேட்பேன் . ஆனால் இந்த வயதிலும் அவர்கள் தன்னை பார்க்க வருபவர்களுக்கு நின்று கொண்டே மனா நிறைவோடு பதில் சொல்வார்கள். காஸ் லைட் யுகத்திலிருந்து காஸ் சிலிண்டர் யுகத்துக்கு நாகரிகம் வளர்ந்தபோதும் அதற்கு ஈடு கொடுத்து அந்த தொழிலிலும் தன் முத்திரையை பதித்து கொண்டவர்கள்.
நண்பர் தாஹா அவர்களையும் ஸாலிஹ் அவர்களையும் ரிபாயி அவர்களையும் சிறு வயதிலேயே நான் அறிவேன். அப்துர் ரஹ்மான் காக்கா மக்கள் இவர்கள் என்று அறிமுக படுத்துவதிலேயே அவர்கள் மகிமை விளங்கும். ஆனால் இந்த மும்மூர்த்திகளின் தந்தை தான் அப்துர் ரஹ்மான் காக்கா என்று இளைய தலைமுறை விளங்கி வைத்துக் கொண்டிருக்கிறது.
''மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்கொல் எனும் சொல் என்று மக்களை பற்றி சொல்லலாம்.
''தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி பந்தியில் முந்தியிருப்ப செயல்'''' என்று தந்தையின் பெருமை பற்றி சொல்லலாம். இரண்டுமே வள்ளுவம் சொல்லும் செய்தி, பணபலம் இல்லாமல் ஒரு பின்புலம் இல்லாமல் இவர்களை வார்த்தெடுத்த அப்துர் ரஹ்மான் காக்கா அவர்களின் உழைப்பு அவர்கள் வயதையும் மீறியது. எதிர்நீச்சலே அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. எல்லோருக்கும் அல்லாஹ் அந்த உழைத்து வாழும் மனோ நிலையை நிறைவாக தருவானாக .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் நல்லமல்களை பொருந்தி கொள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross