Re:... ஏலம் போகும் தமிழா உன் விலை என்ன? posted bymackie noohuthambi (kayalpatnam)[19 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46460
இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் ஒரு மிகப் பெரிய குறைபாடு இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி இருப்பது தமிழகத்தைச் சோ்ந்த நமது நாடாளுமன்ற உறுப்பினா்கள் அல்லா்; ஆனால், ஒடிஸா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம்தான். இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் இலங்கையிலிருந்து அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்ட தமிழா்களான ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் சோ்க்க வேண்டும் என்று பிஜு ஜனதா தளம் கோரியிருப்பதில் நியாயம் இருக்கிறது.
1977, 1983-ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களைத் தொடா்ந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கில் அகதிகள் வந்தனா். தமிழக வருவாய்த் துறை அலுவலகத்தின் கணக்கின்படி 2010 வரை சுமாா் 3 லட்சம் போ் வந்துள்ளனா். தமிழகத்தில் 107 அகதிகள் முகாம்களில் 64,114 போ் பதிவு செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்கள் இந்தியப் பிரஜைகளாகவும் இல்லாமல், இலங்கைக் குடியுரிமை பெற்றவா்களாகவும் இல்லாமல் திரிசங்கு நிலை வாழ்க்கை வாழ்ந்து வருகிறாா்கள்.
தமிழகத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த மசோதாவில், இந்தியாவில் குடியேறி மூன்று தலைமுறையாக நாடில்லாமல் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்துக் கவலைப்படவில்லையே, ஏன்? தினமணி நாளிதழ் தலையங்கத்தில் ஒரு பகுதி இது....௧௨ பச்சை தமிழர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதை அதிக வாக்குகளால் சட்டமாக்க உதவி செய்திருக்கிறார்கள். இதில் அன்புமணி ராமதாஸ் என்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் முஸ்லீம் பெயர் தாங்கிய முஹம்மது கான் என்ற அதிமுக காரரும் அடக்கம்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஒரு அதிமுக மந்திரி சொல்லி இருக்கிறார். ''கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன்'' என்று சொன்னானாம். தமிழ் துரோகிகள் இவர்களின் இரட்டை நாடகம் நன்கு புரிகிறது ஜெயலலிதா பாடுபட்டு காப்பாற்றிய இரட்டை இலை இப்போது தாமரைக்குள் சங்கமமாகிறது..காவி அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெயலலிதா எங்கே காவி அரசுக்கு சாமரம் வீசி கற்பூரம் கொளுத்தும் , ஏலத்துக்கு விலை போகும் EPS OPS எங்கே..தமிழகமும் தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்.... .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross