Re:...கிரகணங்கள் நிகழ்வும் நபி வழியும் posted bymackie noohuthambi (kayalpatnam)[27 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46469
நபிகள் நாயகம் அவர்களின் மகனார் இப்ராஹிம் அவர்கள் வபாத்தான அன்று ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டதாகவும் அது நபிகளாரின் மகன் வபாத்தானதற்காக நடந்ததாகவும் அன்று நபி தோழர்களுக்கிடையே பேசப்பட்ட போது நபிகள் நாயகம் அவர்கள் அதை மறுத்துரைத்து யார் மறைவுக்காகவும் அப்படி ஒரு நிகழ்வு நிகழ்வதில்லை அது அல்லாஹ்வின் ஆணைப்படி நடக்கும் ஒரு நிகழ்வு என்றும் கூறி அந்த மூட நம்பிக்கையை புறந்தள்ளும்படி தனது சகாக்களுக்கு உபதேசித்தார்கள் மேலும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது அல்லாஹ்வுக்கு பயந்து வெகு வேகமாக பள்ளிவாசலுக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் அதன் தீமைகளை விட்டும் பாதுகாவல் தேடுவார்கள். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொழுகை அதை தொ டர்ந்து ஒரு குத்பா பேருரையும் நிகழ்த்தியதாக ஹதீது கிரந்தங்களில் காண முடிகிறது .
நான் சிறியவனாக இருந்தபோது அப்படி ஒரு நிகழ்வு நடந்து இலங்கையில் எனது தந்தை அவர்கள் தொழுகையை வழி நடத்தினார்கள் . நானும் தொழுத ஞாபகம்.
நேற்றும் கூட இப்படி ஒரு தொழுகை ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளியிலும் ஜாவியாவிலும் நடந்ததாக அறிந்தேன் . ஊரு முழுக்க உள்ள பள்ளிவாசல்களில் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் குறைந்த பட்சம் ஜும்மா பள்ளிகளில் அது நடந்திருக்க வேண்டும் அதை பற்றிய பரப்புரை செய்யப் பட்டிருக்கவேண்டும் . ஏதோ ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மக்கள் இதை நினைத்து விட்டோம் . உலகத்தில் எது நடந்தாலும் அதை அல்லாஹ் உடைய வல்லமை அல்லது அவனது சோதனை என்றே நபிகள் நாயகம் அவர்கள் நம் சமுதாயத்துக்கு சொல்லி தந்திருக்கிறார்கள் . எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த கிரகங்களின் தீமைகளை விட்டும் நம்மை பாத்து காத்து அருள்வானாக ஆமீன் . .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross