இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. காயல்பட்டினத்தில் இக்காட்சி நன்கு தெரிந்தது. இணையதளங்கள் வாயிலாகவும், கண்களைப் பாதுகாக்கும் சிறப்புக் கண்ணாடிகள் துணையுடனும் நகர பொதுமக்கள் கிரகணக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு, இன்று காலையில் ஜாவியா அரபிக் கல்லூரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி உள்ளிட்ட இடங்களில் கிரகண சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, கிரகணக் காட்சியைக் காண காயல்பட்டினம் வானவியல் சங்கம் சார்பில் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று அங்கு சென்றவர்களுக்கு சூரிய ஒளியை வடிகட்டும் சிறப்புக் கண்ணாடி பகிரப்பட்டது. அதை அணிந்துகொண்டு சூரியனைப் பார்த்த அவர்கள், கண்களுக்கு எவ்விதக் கெடுதியுமின்றி கிரகணக் காட்சியைக் கண்டுகளித்தனர்.
அப்போது பகிரப்பட்ட சிறப்புக் கண்ணாடியைப் பாதுகாப்பாக வைத்திருந்த காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அதைப் பயன்படுத்தி இன்று நிகழ்ந்த கிரகணத்தையும் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் (கிரகணக் காட்சி):
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
|