காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பயன்படுத்தும் வாகனம் ஒரே ஆண்டில் ஒன்றரை முறை உலகையே சுற்றி வரும் அளவுக்கு எரிபொருள் நிரப்பியுள்ளதாக ஆதார ஆவணங்களுடன் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
வாகனங்களுக்கு என - எரிபொருள் வகைக்கு மட்டும் - நகராட்சி எவ்வளவு செலவு செய்கிறது?
ஒவ்வொரு வாகனமும் எவ்வளவு தூரம் - ஓர் ஆண்டில் - ஓடியது?
ஒவ்வொரு வாகனத்திற்கும் எவ்வளவு லிட்டர் எரிபொருள் - ஓர் ஆண்டில் - நிரப்பப்பட்டது?
ஜனவரி 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான காலகட்டத்திற்கு இந்த தகவல்கள் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி - மேலே கூறப்பட்ட காலகட்டத்தில் - ரூபாய் 38 லட்சத்து, 86 ஆயிரத்து 19 ரூபாய் - எரிபொருள் வகைக்கு, KAYAL FUEL CENTRE என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. (நகராட்சியின் 10 வாகனங்களில், 9 வாகனங்கள் மட்டும் - இந்த காலகட்டத்தில் இயக்கப்பட்டதாக நகராட்சி தெரிவித்துள்ளது.)
இவ்வாண்டு புதிதாக 4 வாகனங்கள் (LIGHT COMMERCIAL VEHICLES; LCVs) வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை - இவ்வாண்டு, இன்னும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் மட்டும் - ரூபாய் 3.8 லட்சம் ரூபாய் - எரிபொருள் வகைக்கு நகராட்சி செலவு செய்துள்ளது என கூறப்படுகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் ஒவ்வொரு வாகனமும் ஓடியதாக வழங்கப்பட்டுள்ள தூரமும், அதற்காக செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் எரிபொருள் அளவும் - ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. வாகனம் வாரியாக - விபரங்களை விரிவாக - கீழே காண்போம்.
==========
TN92 A 6369
==========
மேலுள்ள எண்ணில் உள்ள MAHINDRA BOLERO LX 2WD - நகராட்சி ஆணையர் பயன்படுத்தும் வண்டியாகும். 18-4-2017 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 63,000 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 172 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 6300 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 17 லிட்டர்!
==========
TN69 U 9148
==========
மேலுள்ள எண்ணில் உள்ள MAHINDRA BOLERO XCS - நகராட்சி பொறியாளர் பயன்படுத்தும் வண்டியாகும். 13-9-2007 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 42,300 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 115 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 4700 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 12 லிட்டர்!
பூமியின் சுற்றளவு (CIRCUMFERENCE) சுமார் 40,000 km என்ற அளவில் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் வாகனங்கள் இரண்டும் சேர்ந்து - பூமியினை 2.5 முறை (1,05,300 km) - ஓர் ஆண்டில் - சுற்றியுள்ளன!
==========
TN69 AR 6018
==========
மேலுள்ள எண்ணில் உள்ள MAHINDRA SWARAJ 744FE - குடிநீர் விநியோக பணிக்கு பயன்படுத்தப்படும் வண்டியாகும். 6-4-2015 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 1,240 மணி நேரங்கள் இயக்கப்பட்டதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 2480 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 7 லிட்டர்!
==========
TN92 B 8679
==========
மேலுள்ள எண்ணில் உள்ள JCB 3 DX BACKHOE LOADER - சாலைகள் தோண்ட போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்டியாகும். 12-6-2018 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 571 மணி நேரங்கள் இயக்கப்பட்டதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 4000 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 11 லிட்டர்!
==========
TN69 S 0761
==========
மேலுள்ள எண்ணில் உள்ள PIAGGIO APE 3 WHEELER - நகராட்சி சுகாதாரத்துறை பயன்படுத்தும் வண்டியாகும். 15-2-2008 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 11,000 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 30 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 1100 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 3 லிட்டர்!
==========
TN69 S 0767
==========
மேலுள்ள எண்ணில் உள்ள PIAGGIO APE 3 WHEELER - நகராட்சி சுகாதாரத்துறை பயன்படுத்தும் வண்டியாகும். 15-2-2008 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - இயக்கப்படவில்லை என நகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
==========
TN69 U 6922
==========
மேலுள்ள எண்ணில் உள்ள ASHOK LEYLAND ECOMET 1112 E4/2 - நகராட்சி சுகாதாரத்துறை பயன்படுத்தும் வண்டியாகும். 6-2-2007 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 11,340 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 31 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 3780 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 10 லிட்டர்!
==========
TN69 AT 0603
==========
மேலுள்ள எண்ணில் உள்ள TATA SUPER ACE - நகராட்சி சுகாதாரத்துறை பயன்படுத்தும் வண்டியாகும். 18-12-2012 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 9,930 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 27 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 3310 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 9 லிட்டர்!
==========
TN69 AT 2821
==========
மேலுள்ள எண்ணில் உள்ள ASHOK LEYLAND ECOMET 1212E3 14 TIPPER - நகராட்சி சுகாதாரத்துறை பயன்படுத்தும் வண்டியாகும். 14-3-2012 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 24,588 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 67 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 10, 800 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 30 லிட்டர்!
==========
TN69 S 0146
==========
மேலுள்ள எண்ணில் உள்ள SML ISUZU T3500U - நகராட்சி சுகாதாரத்துறை பயன்படுத்தும் வண்டியாகும். 20-12-2007 அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வண்டி - 1-1-2018 முதல் 31-12-2018 வரை - 12,900 km ஓடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தினசரி சராசரியாக - 35 km. இந்த வாகனத்திற்கு ஓர் ஆண்டில் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவு - 4,300 லிட்டர் (டீசல்). அதாவது தினசரி சராசரியாக 11 லிட்டர்!
அதாவது - ஓர் ஆண்டில் - 9 வாகனங்களுக்கும் சேர்த்து - 40,770 லிட்டர் எரிபொருள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியவையாக உள்ளன. இருப்பினும் - இந்த முறைக்கேடுகள் நகராட்சியில் புதிதல்ல. 2011 - 2016 காலகட்டத்தில், இந்த முறைக்கேடுகளுக்கு முடிவுக்கான - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் - ஒவ்வொரு நகராட்சி வாகனத்திற்கும் GPS கருவி பொருத்தி - FUEL/FLEET MONITORING முறையினை கொண்டு வர தீர்மானம் கொண்டுவந்தார். நகராட்சி அதிகாரிகள் அதனை அமல்படுத்தவில்லை.
பொன்முட்டை இடும் வழியினை அடைக்க யார் தான் முன்வருவார்கள்?
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|