Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:37:17 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21632
#KOTW21632
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 23, 2019
ரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட விபரங்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2900 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 75-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.12.2019 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ. தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ. நுஸ்கி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.



ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபில் ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதிக் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்தித் தந்த சகோதரர் நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.



மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:

நகரிலிருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கப்பட்டது.

மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:

2020ஆம் ஆண்டிற்கான மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தொடர்ந்து நல உதவிகளை வழங்கிடத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த திட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் அனுசரணை வழங்க இசைந்துள்ளவர்கள் மூலம் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்துள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்களை 12 மாதங்கள் தொடர்ந்து வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கிட அனுசரணை வழங்கியவர்களுக்கு நன்றி கூறப்பட்டது.

இக்ராஃ அகாடமி:

நகரின் கல்வி சார்ந்த நல உதவிகளையும், கல்விக் கடன்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வரும் இக்ராஃ அமைப்பு, நகரில் IAS தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்களை அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயின்றிட அனுசரணை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது, இந்த பயிற்சி வகுப்புக்கான செலவுகளைக் காயல் நல மன்றங்கள் மூலம் நன்கொடையாகப் பெற இக்ராஃ அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எமது மன்றம் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும் இக்ராஃ அமைப்பு மூலம் தட்டச்சு பயிற்சி பெரும் இரண்டு மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது, கடந்த மாதம் நகரப் பள்ளிகளில் ஹிந்து நாளிதழ் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிட்ட “வெற்றிக்கொடி” நாளிதழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க எமது அமைப்பின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது.

Kayal Schools Welfare Projects:

உள்ளூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects மூலம் கடந்த காலங்களில் பல நல உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தீவுத் தெரு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க எமது மன்றத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிர்வாகக் குழு:

2018-19ஆம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு/செயற்குழுவின் பதவிக் காலம் டிசம்பர் 2019 உடன் நிறைவு பெறுகின்றது. 2020-21ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு/செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நடப்பு நிர்வாகக்குழுவின் தலைவர் சகோதரர். PMS முஹம்மது லெப்பை, செயலாளர் சகோதரர் இஸ்மாயில் மற்றும் பொருளாளர் சகோதர சூஃபி ஆகியோர் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிர்வாகக் குழுவினருக்கும் வழமைபோல் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இக்கூட்டம் நடத்த சகோ. தாவூத் இத்ரீஸ் அவர்கள் இடம் வழங்கினார். சகோ. இஸ்மாயில் மற்றும் சகோ. தாவூத் இத்ரீஸ் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து, மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இறுதியாகச் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில, துஆவோடு இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved