காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் 2018 – 2019 பருவத்திற்கான வரவு – செலவு கணக்கறிக்கை, “நடப்பது என்ன?” குழுமத்தில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
1. Re:...ஒரு அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (kayalpatnam)[22 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46467
நாட்டிலுள்ள ஊரிலுள்ள பொது நல இயக்கங்கள் எல்லாம் பின்பற்றவேண்டிய அழகிய முன்மாதிரி. கணக்கு கேட்கும்போதுதான் சிக்கல்களும் உரசல்களும் பிரிவினைகளும் ஏற்படுகின்றன.
மயிர் ஊடாடா நட்பு பொருளூடாட கெடும் என்பார்கள். ஒரு திராவிட இயக்கம் அதன் வெற்றியும் மதிப்பும் உச்சத்தில் இருந்தபோது அந்த இயக்கத்தில் பெரிய பதவியில் இருந்தவரே தனது இயக்கத்தின் கணக்கு வழக்குகளை பொது மேடையில் கேட்டதால் சர்ச்சை உண்டாகி இயக்கமே இரண்டாக பிரிந்த கதை தமிழகத்தின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே பொது நல அமைப்புக்கள் இப்படி தாங்களாகவே முன்வந்து நிதி நிலை அறிக்கையை அவ்வப்போது மக்களுக்கு ஜமாத்தார்களுக்கு அறிய தந்தால் பல சந்தேகங்கள் தீரும் நிதிகள் வந்து குவியும்.
IQRA போன்ற கல்விக்கு உதவும் இயக்கங்களில் வெளிப்படை தன்மையும் கேள்வி கேட்கும் உரிமையும் அவர்கள் தரும் விளக்கங்களும் நிதி நிலை அறிக்கையும் நம் எல்லோரையும் வியப்படைய செய்கிறது அதனால் மக்கள் அந்த இயக்கத்துக்கு வாரி வழங்குகிறார்கள்
''நீங்கள் கேள்வி கேட்கப்படுமுன் நீங்களே உங்களை கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்'' என்று உலமாக்கள் நம் இம்மை மறுமை வாழ்வைப்பற்றி சொல்லிக் காட்டுவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross