காயல்பட்டினத்தில் நேற்று (21.12.2019. சனிக்கிழமை) 13.00 மணிக்குப் பிறகு மழை பெய்யவில்லை. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று 08.00 மணிக்கு வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியல் படி காயல்பட்டினத்தில் 8 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
1. Re:...பருவ மழைக்கு நாள் கணக்கு இல்லை அது அல்லாஹ்விடம் உள்ளது posted bymackie noohuthambi (kayalpatnam)[22 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46468
அது ஹுதைபிய்யா உடன்படிக்கை நேரம் அன்றிரவு மழை பெய்தது நபிகள் நாயகம் அவர்கள் விடிந்ததும் தோழர்களை அழைத்து நேற்றிரவு சிலர் காஃபிராகி விட்டார்கள் சிலர் மூமினாக இருந்தார்கள் என்று சொன்னதும் நபி தோழர்கள் அதிர்ச்சி அடைந்து அது எப்படி நாயகமே என்று கேட்டார்கள். பருவ நிலையால் மழை பெய்தது என்று நினைத்தவர்கள் முன்னவர்கள் அல்லாஹ்வின் பெரும் கருணையால் மழை பெய்தது என்று நினைத்தவர்கள் பின்னவர் என்று ஒரு ஆலிம் பெருந்தகை தனது சொற்பொழிவில் சொன்னார்கள் . அந்த நாள் நினைவில் இல்லை அதற்கு ஆதாரம் கேட்கும் துணிச்சலும் எனக்கில்லை. ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்று ஒருவர் சொன்னால் நாம் நம்பி விட வேண்டும் . அவர் தவறான தகவலை தந்தால் அவர் நபிகள் நாயகத்தின் சாபத்துக்கு ஆளாகி விடுவார் . அதை கேட்டு அமல் செய்பவர் மீது குற்றமில்லை .
ஆனால் காலப் போக்கில் கேள்வி கேட்கும் மனோ நிலை பெருகி விட்டதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது வாடா கிழக்கு பருவ மழை இவ்வளவுதான் பெய்திருக்க வேண்டும் ஆனால் அதற்கும் அதிகமாக பெய்து விட்டது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. நாளை மழை பெய்யும் என்கிறது . அன்று சரியான வெயில் கொளுத்துகிறது. அக்கினி நட்சத்திரம் என்கிறார்கள் அன்று அடாது மழை பெய்கிறது இதெல்லாம் ஒரு அனுமானம்தான்.
அள்ளாஹ்வின் நாட்டப்படியே மழை பெய்கிறது வெயில் அடிக்கிறது குளிர் அடிக்கிறது என்ற நம்பிக்கையை முஸ்லிம்களாகிய நாம் உருத்தியாக நம்புவோமாக. தேவையான மழையை எங்களுக்கு தா வேறு விளை நிலங்களுக்கு அந்த மழையை திசை திருப்பிவிடு என்று நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக . நம் மக்களையும் அவர்கள் உடமைகளையும் அல்லாஹ் பெருமலையிலிருந்தும் சேதத்திலிருந்தும் நம்மை காப்பாற்றுவானாக. பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டுவார்கள் அவர்கள் இன்னல்களை களைவதற்கு முயற்சி மேற்கொண்டு உடலால் உதவி செய்பவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .
VA YURSILISAMAA 'A ALAIKUM MIDHRAARAA ...ALQURAN .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross