நாளை (டிசம்பர் 26) சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. காயல்பட்டினத்தில் இக்கிரகணம் 3 மணி நேரம் தென்படும் என காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (மெகா) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நாளை (26-12-2019) - உலகின் பல பகுதிகளில் கங்கண சூரிய கிரகணம் (TOTAL ANNULAR SOLAR ECLIPSE) - தென்படும்.
இந்த கங்கண சூரிய கிரகணம் - காயல்பட்டினத்தில் பகுதி சூரிய கிரகணமாக (PARTIAL SOLAR ECLIPSE) காட்சி தரும். உச்சக்கட்டத்தில் - ஏறத்தாழ 93 சதவீதம் வரை - சூரியனை, கேந்திரம் மறைக்கும்.
காயல்பட்டினத்தில் பகுதி சூரிய கிரகணம் துவங்கும் நேரம்: காலை 8:07 IST
காயல்பட்டினத்தில் சூரிய கிரகணம் உச்சகட்டத்தை அடையும் நேரம்: காலை 9:32 IST
காயல்பட்டினத்தில் சூரிய கிரகணம் நிறைவுறும் நேரம்: காலை 11:15 IST
காயல்பட்டினத்தில் கிரகணம் நீடிக்கும் மொத்த நேரம்: 3 மணி நேரம், 8 நிமிடங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross