காயல்பட்டினத்தில் நேற்று (20.12.2019. வெள்ளிக்கிழமை) 13.00 மணி துவங்கி, இன்று 13.00 மணி வரை தொடர் மழை பெய்தது. இரவில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை பெய்து, சில நாட்கள் இடைவெளி இருந்ததால், நகர் முழுக்கத் தேங்கியிருந்த மழைநீர் கொஞ்சங்கொஞ்சமாக வற்றி வந்தது. இந்நிலையில், இன்று வரை பெய்துள்ள இம்மழையால் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று 08.00 மணிக்கு வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியல் படி காயல்பட்டினத்தில் 69 மில்லி மீட்டரும், 16.00 மணிக்கு வெளியிடப்பட்ட பட்டியல் படி 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|