காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் கோரிக்கையை ஏற்று, அரசு மருத்துவமனையில் முழுநேர Lab Technician நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக, தமிழக அரசுக்கு அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக நிரந்தர ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (LAB TECHNICIAN) - நியமனம் செய்யப்படாமல் இருந்தது. தற்காலிக அடிப்படையில் வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டு - பணிகள் நடைபெற்று வந்தன.
முழுநேர LAB TECHNICIAN நியமனம் செய்ய, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
கடந்த மாதம் இறுதியில் - சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை (DMS) இயக்ககத்தில் - இயக்குனர் டாக்டர் மருத்துவர் டி.எஸ்.ஸ்வாதி ரெத்தினாவதி அவர்களை மெகா நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து - இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.
தற்போது - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு முழு நேர LAB TECHNICIAN ஆக திருமதி கீர்த்திகா நியமனம் செய்யப்பட்டு பணியில் இணைந்துள்ளார்.
காயல்பட்டினம் பொதுமக்களின் நலன் கருதி துரிதமாக இந்நியமானம் செய்த DMS மருத்துவர் டி.எஸ். ஸ்வாதி ரெத்தினாவதி அவர்களுக்கு, மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|