சுதந்திர தாகம் posted bySyed (DxB)[30 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4878
ஏதோ வெளி நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் நடந்த சம்பவங்களை (கூத்துகளை)ப் பற்றி செய்தியில் படித்து அதற்கு கருத்துரையும் எழுதுவது போலல்லவா இருக்கிறது, நாம் படிக்கும் இந்த செய்திகளும் COMMENTSம்.
நம் சொந்த மண்ணில் நம்மால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் தான் இது போன்று பொறுப்பற்ற முறையில் தமது EGO காரணமாக மக்கள் பணத்தை வெட்டித்தனமாக வீண் விரையம் செய்கிறார்கள் என்ற உண்மை நிலையை என்னும் போது நிச்சயமாக வேதனையும், (இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்ததற்காக) வெட்கமும் பட வேண்டியுள்ளது.
துரோகியை விட விரோதி பரவாயில்லை என்று தேர்தல் நேரங்களில் ஆட்சி மாற்றத்திற்கு நம் மக்கள் சொன்ன சப்பைக்கெட்டு நினைவில் வருகிறது.
எத்தனை காலத்திற்குத்தான் நாம் மற்றவர்களை/எதிரிகளை மாற்றி மாற்றி அரியணை அமரவைத்துப் பார்ப்பதாக உத்தேசம்?
நமக்கென்று ஒரு கட்சி ஒரே கட்சி, ஒரே சின்னம், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் (பாகுப்பாடின்றி) உழைக்கும் உயர்ந்த நோக்கத்தில் சுதந்திரமாக இயங்கும் "சுய கவுரவம்" கொண்ட அமைப்பு உருவாகும் காலம் என்றுதான் வருமோ?
இறைவன் எல்லாவற்றுக்கும் போதுமானவன். وبه نستعيــن
Moderator:Dear Syed, pls provide your full name to avoid rejecting your comments in future.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross