செய்தி: இக்ராஃ பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்! புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் தேர்வு!! இதர நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பொறுப்பி்ல்தான் இருக்கிறேன்... posted bySK Salih (Kayalpatnam)[02 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4940
இச்செய்தியைப் படித்த பலருக்கும், ஏற்கனவே பொறுப்பிலிருந்த பலர் விடைபெற்றுவிட்டார்களோ என்ற எண்ணம் மேலிட வாய்ப்புள்ளது போல் தோற்றமளிக்கும்தான்! என்றாலும், அதை ஊன்றிப் படித்தால் உண்மை புரியும். “வெற்றிடமாக உள்ள பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்ராஃவின் தலைவரான ஹாஜி பாளையம் ஹஸன் சார் அவர்களுக்கு அடுத்ததாக சுழற்சிமுறையில் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் தலைவராகவும்,
இக்ராஃவின் செயலாளரான சகோ. தர்வேஷ் அவர்கள் நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டதால் செயலாளர் பொறுப்பில் சகோ.கேஜே.ஷாஹுல் ஹமீத் அவர்களும்,
பொருளாளராக இருந்த ஹாஜி ஸ்மார்ட் காதர் அவர்கள் ஊரில் அதிக காலம் இருக்க இயலாது என்று தெரிவித்து பொறுப்பை ஒப்படைத்ததையடுத்து, துணைச் செயலாளராக இருந்த சகோ. கே.எம்.டி.சுலைமான் அவர்களை பொருளாளராகவும்,
சகோ. கே.எம்.டி.சுலைமான் அவர்களின் துணைச் செயலாளர் பொறுப்பில் ஆசிரியர் அஹ்மத் சுலைமான் அவர்களும்,
செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் வெற்றிடமான இரண்டிடங்களுக்கு ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அவர்களும், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.
இதில் ஏற்கனவே பொறுப்பிலிருக்கும் துணைச் செயலாளரான நானும் அதே பொறுப்பில் நீடிக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளவும்.
பொதுக்குழுக் கூட்டத்தைப் பொருத்த வரை, பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை உள்ளடக்கிய Society Actஇன் படி இக்ராஃ அரசுப் பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்பதால் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
எனவே தாங்கள் யாரெல்லாம் வரவில்லை என்று குறைபடுகிறீர்களோ அவர்கள் பொதுக்குழு உறுப்பினராக இருந்தால் அவர்களுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிக.
பொதுக்குழு உறுப்பினராக யாரும் இணையலாம் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross