RIGHTS posted byN.S.E.MAHMOUD (Yanbu. KSA.)[15 October 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 527
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மேலே உள்ள செய்திகளை படிக்கும்பொழுது உள்நோக்கம் உண்டா? இல்லையா? என்பதை இறைவனே அறிவான்.
உதவி தொகையை பெறுவதற்கு சான்றிதழ்களில் வித்தியாசம் இருந்து அதன் காரணமாக அவர்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை ஆசிரியர் மறுத்தால் அதை எந்த வகைலாவது ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் அதை எழுத்து மூலமாக தாருங்கள் என்று ஏன் தலைமை ஆசிரியர் கேட்கிறார்? அல்லது பெற்றுக்கொள்கிறார்? இது அவசியம் ஆராயப்பட வேண்டிய விசயம்.
பிற்காலத்திலே இது நம் ஊரையும், சமுதாயத்தையும் பாதிக்கும்.
காயல்பட்டனத்திலே பெரும்பாலனவர்கள் உதவித்தொகை வேண்டாம் என எழுதி கொடுத்து இருப்பார்களானால், வருங்காலத்திலே உதவி தொகைகள் கிடைக்காமல் போகவோ? அல்லது விகிதாச்சாரங்கள் குறையவோ வாய்ப்பு உண்டு. எனவே முறையான நடவடிக்கையின் மூலம் நம் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தலைமை ஆசிரியர் அவர்கள் பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவியர்களுக்கு உதவிசெய்வதாக சொல்கிறார்கள், அது உண்மைதான், காரணம் அரசு தேர்வுக்காக அவர்கள் இதை சரிசெய்து அனுப்பாவிட்டால் இந்த பிரச்சினையில் மாணவிகளை விட பள்ளிக்கூட நிர்வாகிகளுக்குத்தான் அதிக சிரமம் ஏற்படும்.
"இந்த விதிமுறைகளை ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கே நாங்கள் விதிக்கிறோம்..."என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார்கள். ஒன்பது வரை உள்ள மாணவிகளும் உதவித்தொகை பெற்றால் அந்த குடும்பங்கள் எவ்வளவு பயனடையும் என்பதை தலைமை ஆசிரியர் உணர்ந்து செயலாக்கிட வேண்டும்.
எனவே, இனிமேலாவது பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் விழிப்புணர்வுடன் இருந்து நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற வேண்டும்.
இவைகளிலே ஏற்படும் சட்டச்சிக்கலுக்கு பொதுத்தொண்டுகளை அணுகி உதவி பெற்றிட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross