சபாஷ் முதல்வர்! posted bykavimagan m.s.abdul kader (dubai)[15 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5299
மச்சான் எஸ்.கே.எஸ்.,வாஹித் காக்கா ஆகியோரது கருத்துரைகள் ,ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு வழி அமைத்து தந்திருக்கிறது
என்று நம்புகிறேன்.அவர்களுக்கு எனது நன்றி!
ஓர் அரசாங்கம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான இலக்கணங்களாக நண்பர் ஷமீம் அவர்கள் குறிப்பிட்ட எல்லாக் கருத்தும் எனக்கு
உடன்பாடானதே! கப்பல் போக்குவரத்து குறித்த மாறுபட்ட செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், மத்திய அரசின் இலாகாவிற்கு
உட்பட்ட இந்த விஷயத்தில் அம்மா எங்கிருந்து வந்தார் என்று கேட்டிருந்தது நிஜம். நிற்க!
பெரும்பாலோரது எண்ணத்திற்கு எதிராக கருத்துக்களை வைக்கும்போது ஏற்படும் விளைவுகளை நான் அறிவேன்.அதனால் என்ன,
நியாயங்கள் செத்து விடுமா? காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசு,ராணுவத்தின் தவறான நிலைப்பாட்டை சுற்றிக்காட்டியமைக்காக
அருந்ததிராய் அவர்கள் தேசத்துரோக வழக்கையும்,நக்சலைட்டுகளுக்கு கருத்தாதரவு தந்தமைக்காக பினாயக்சென் அவர்கள் ஆயுள்
தண்டனையையும் சந்திக்கும் காலம் இது.
பிரபாகரனும்,பின்லேடனும் தனிமனிதர்கள்.. ஆனால் ராஜபக்ஷே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் அதிபரே,தன் சொந்தநாட்டு
மக்களை துப்பாக்கி,பீரங்கி,கனரக ஆயுதங்கள், போரில் கூட தடை செய்யப்பட பேரழிவு ஆயுதங்கள்,ஆகியவற்றை பயன்படுத்தி,பாது
காக்கப்பட்ட பகுதிகள்,பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகளைத்தாக்கியும்,இளைஞர்களின் ஆணுறுப்பை அறுத்து,யுவதிகளை கற்பழித்து,
குழந்தைகள் மீது தீச்சூடு வைத்து,முதியவர்களை பூட்ஸ் காலால் நசுக்கி,இவ்வாறாக ஒரு மாதகாலத்திற்குள் ஒரு லட்சம்பேர் கொல்லப்பட்டு
ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தினான் என்று சர்வதேச ஊடகங்களும்,ஐ.நா.மாமன்றமும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டின. இதன் பின்னணியில்
ஈரம் இல்லாத இந்திய அரசும் இருந்ததாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை குருவி
சுடுவதுபோல குண்டுக்கிரையாக்கி,தீவிரவாதிகளை என்கவ்ண்டர் செய்ததாக தம்பட்டமடிக்கும் பாவிகள்தானே!
CHANNEL 4 என்ற ஊடகம் நடந்துமுடிந்த அத்தனை அராஜகத்தையும் ஒளிபரப்பவிருக்கிறது.இந்தச்சூழ்நிலையில் இரத்தக்கறைபடிந்த
இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று,தி.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு
தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு
ஜனநாயக நாட்டில்,ஒரு மாநில சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும்போது,
தன்மானம் உள்ள ஒரு முதலமைச்சர் அதனைத் தடுக்கமுடியாவிட்டாலும் எதிர்க்கவேண்டும்.அதைத்தான் நெஞ்சுரமும்,
தைரியமும் கொண்ட நமது முதல்வர் செய்திருக்கின்றார்.இவரைப்போன்று தட்டிக்கேட்க ஒரு நாதியில்லாத காரணத்தால்
பாலஸ்தீன முஸ்லிம்கள் படுகின்ற கொடுமைகள் சொல்லி மாளாது.
எந்த விஷயத்தையும் ஆய்வு செய்யாமல் அனுகுபவர்களைக் குறித்த கவலையின்றி,தைரியமாக செயல்படும் முதல்வருக்கு
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
கப்பல்போக்குவரத்தால் தென்தமிழகம் வளர்ச்சி அடையும் என்ற கருத்தை வைத்திருக்கும் வாஹித் காக்கா அவர்களே!
மலையாள ஊடகவியலாளர்.எஸ்.ஆர்.சுசீந்திரன் அவர்கள்,இந்த வாரம் வர்த்தமானம் மலையாள பத்திரிகையில் எழுதி
இருக்கும் கட்டுரையை தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.அதன் பின்னர் தானாகவே தங்களது கருத்து மாறிவிடும்.
கடந்தமாதம் இலங்கைக்கு சென்றிருந்த போது எனது காதில் விழுந்த குரல்களை நான் இங்கு பதிவு செய்தால்,இந்த
இணையத்தளம் கண்ணீரில் கரைந்துவிடும் நண்பர்களே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross