Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:48:54 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6474
#KOTW6474
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 15, 2011
கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்க! மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா மனு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3679 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டிருப்பது சரியல்ல. இதை உடனடியாக தடைசெய்ய வேண்டும். மேலும், தமிழகத்துக்கு என சிறப்பு நிதி ஒதுக்கீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளிக்க முன்வர வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.



முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். நண்பகல் 12.00 மணிக்கு, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தேவை மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, 30 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் போர் நடந்த கடைசி நேரங்களில், அப்பாவி தமிழ் மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் வரை கொண்டு செல்ல இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, உரிமைகள் வழங்கிட இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். மத்திய அதிகாரங்களை மாநிலங்களுக்கும் பரவலாக்கி தமிழர்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும், பல கோரிக்கைகளை ஏற்க மறுத்துக்கொண்டே வருவதாலும் இலங்கை மீது பொருளாதார தடையைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் புனர்வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெறுவது குறித்தும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் துவங்கப்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்து சேவையை உடனடியாக தடைசெய்ய வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவதற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பிரதமரே தலையிட்டு இந்தச் சேவையை நிறுத்த வேண்டும்.

ஊதியம், பென்ஷன் போன்றவற்றாலும் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளாலும் தமிழக அரசு நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பாரத்தை சமாளிப்பதற்காக சிறப்பு நிதிஒதுக்கீடாக ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய மின் நிலையங்களில் இருந்து 3,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யூர் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய வேண்டும். நிறைய மின் திட்டங்களும் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை கட்ட கேரள அரசுக்கு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது. எந்தவொரு ஆய்வுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது. கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

இந்த நிதியாண்டில் தமிழக அரசின் திட்ட மதிப்பீடு, ரூ.23 ஆயிரம் கோடி வரை இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரூ.23 ஆயிரம் கோடியை ஏற்றுக் கொள்ளவேண்டும். மானியமாக ரூ.2,300 கோடி வரை வழங்க வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 52 ஆயிரம் கிலோ லிட்டர் வரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு இருந்தது. இதில் 8,226 கிலோ லிட்டர் குறைக்கப்பட்டு விட்டது. இந்நிலை மாறி, 65 ஆயிரத்து 165 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.

சென்னையைச் சுற்றி அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட திட்டம் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டமாக வண்டலூருக்கும் மீஞ்சூருக்கும் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு, ரூ.1,075 கோடி வரை தேவை. இதற்கு உதவி வரும் ஜப்பான் நாட்டு வங்கியுடன் பேசி நிதியை மத்திய அரசு விரைந்து வாங்கித்தர வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமரை, முதல்வர் சந்தித்துப் பேசியபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் உடன் இருந்தார்.

நன்றி:
தினமலர் (14.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கப்பலுக்கு ஆப்பு...???
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [15 June 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5268

ஏன் நல்லாதான போய் கிட்டு இருந்துஜூ ஏன் இப்பிடி......???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எல்லா பிளைட்
posted by சாளை நவாஸ் (singapore) [15 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5269

அப்படியே அந்த அம்மாகிட்டே சொல்லி கொழும்புக்கு போகிற எல்லா பிளைட் (Flight ) யும் நிறுத்த சொல்லுங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. useless CM
posted by Imran Uzair (Hong Kong) [15 June 2011]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 5270

Watch it... This is only begining... Wait and see. DMK is good for ever... Useless CM... Lets see...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. INGIRUNTHU THAAN VANTHATHU.............
posted by Shameemul Islam SKS (Chennai) [15 June 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5272

ITHU EN KARUTHTHU............

கப்பல் கதையும் அதே கதைதான்.........
இது மக்கள் நலம் நாடும் அரசா அல்லது அரசியல்வாதிகள் நலம் நாடும் அரசா????? ஒன்றுமே புரியவில்லை.
இவர்கள் அரசியல் காரணங்களுக்கெல்லாம் மக்கள்தான் பலிகடாவாக வேண்டி இருக்கிறது.

அமைதியான குடும்ப வாழ்வு, அயல் நாட்டில் வணிகம், அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் உடனான உறவு மேம்பாடு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு, தரமான கல்வி, ஊழலற்ற நிர்வாகம் என்பன போன்ற எண்ணற்ற விஷயங்கள் மக்கள் நலம் நாடும் அரசுகள் முன் முன்னிலை பெறுபவை.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் ஒன்றுதான் என்பது போன்று முந்தைய அரசு அல்லது மத்திய அரசு ஏதாவது நல்லது செய்தது என மக்களிடம் பெயர் வாங்கி விடக்கூடாது என கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதுதான் பிந்தைய அரசின் அல்லது மாநில அரசின் போக்காகவே இருந்து வருகிறது.

கப்பல் கதையும் அதே கதைதான்.

வாக்களித்த மக்களோ ஆங்கில பழமொழியில் வரும் "Caught between the devil and the deep sea" என்பது போல பேய்க்கும், பெருங்கடலுக்கும் மத்தியில் அகப்பட்ட கதைதான்.

தனது வெற்றியை மக்களின் வெற்றியாக பெருமிதத்துடன் கூறிய அம்மா அவர்கள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காது மக்கள் நலம் நாடும் அரசை (WELFARE STATE)ஐ வழங்குவதுதான் மக்களுக்கு செலுத்தும் நீதியாகும்.

ITHU KAVIMAKAN KAKA KARUTHTHU.....................
எங்கும் அம்மா எதிலும் அம்மா எல்லாம் அம்மா அம்மம்மா தாங்கலையே!

கப்பல் போக்குவரத்து என்பது முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு உட்பட்டது. அதன் மந்திரியாக திரு.வாசன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்றார். இத்தனை கேவலத்திற்குப் பிறகும் தி.மு.க.வும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. உண்மை இப்படியிருக்க, இந்தப் பிரச்சினையில் எங்கிருந்து வந்தார் அம்மா?

கைவிடப்பட்ட மேலவை, கையாலாகாத தலைமைச் செயலகம், கைக்கு கிட்டி வாய்க்கு கிட்டாமல் போன சமச்சீர் கல்வி, இவற்றுள் வேண்டுமானால் அம்மாவின் கை இருக்கலாம். ஆனால் கப்பல் பிரச்சினையில் தெரிவது காங்கிரசின் கைகளே! தற்போதைய தேவை, எதிலும் செயல்படாத மன்மோகன் அரசு, இதிலாவது செயல்படும் என்று நம்பிக்கை வைப்பதே!

INDRU VELIYAAKIYULLA SEITHIYAAKIYA "KAPPALAI NIRUTHTHA MATHTHIYA ARASIDAM AMMA KORIKKAI" ANAITHTHU NAALITHAZHKALILUM VANTHULLATHU.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உருப்படியா ஏதாவது செய்ய சொல்லுங்க.
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 June 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5276

அம்மாவின் ஒருமாத கால ஆட்சியில் வெளியிட்ட அதிரடி உத்தரவுகளின் விளைவாக தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு, 2G Spectrum ஊழலை மிஞ்சிவிடும் போல் இருக்கின்றது!!

ஈழத்தமிழர்கள் பிரச்சனை ஒருபுறம் இருக்கட்டும், முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஏதாவது செய்ய சொல்லுங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. STUPID POLITICIANS
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [15 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5280

These politicians won't change their behaviours for ever.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உருப்புடாத ஆட்சி
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [15 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5284

இந்த ஆட்சி உருப்புடாத ஆட்சி. நல்ல திட்டங்களை கொண்டுவருவதற்கு தடையுள்ள ஆட்சி. அம்மாவுக்கு ஒட்டு போட்டவர்களுக்கு ஆப்பு வைக்கிற ஆட்சி. மக்களே சிந்திப்பீர் இனியாவது விழிதிருப்பிர் விழி திறந்திருப்பிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கப்பல் சேவை
posted by Lebbai (Riyadh) [15 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5285

இந்த கப்பல் சேவையை ஏன் நிறுத்தனும். இரு நாடுகளுக்கும் நற்புறவு இருப்பதில் என்ன தவறு? தமிழக மக்கள் அங்கே கஷ்டப்படுகிறார்கள் என்றால் விடுதலை புலிகளும்தான் முக்கிய காரணம். அங்கு வாழும் தமிழர்களும் சமுக அந்தஸ்து பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுத்தால், அங்கு தமிழர்களின் பாடு அம்போதான்.

முந்தைய DMK அரசு, ADMK கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது. அதுபோல் இனி தமிழக அரசு, கப்பல் போன்ற நல்ல திட்டமாக இருந்தால், தொடர்ந்து செயல் படுத்தவேண்டும். நம் சமுதாயத்துக்கு என்று அமைச்சரவையில் இடம் உண்டா? இனியாவது தர வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Like Maniac
posted by A.W.S. (Kayalpatnam) [15 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5287

We all knew that this women is an arrogant, adamant, stubborn and above all 'The despot of AIADMK". Despite the fact, I always liked to believe that she is a good adminstrator. But that proved to be wrong and lately she has been behaving like a Maniac. Her stand against 'Samacheer kalvi" and Ferry service to colombo" are two good examples.

Samacheer Kalvi: Students are start sitting idle at their class room without text books. Precious time of their lives has been wasted.

Ferry service: She is ignorance of the fact that it is the south Tamil Nadu which benefits the most in general and Tuticorin in particular.

On her very first day, she has caused apprehension among her Muslim supporters by inviting Mr.Modi for her inaugural function who has been denied visa even by USA.

It has been hardly a month since she returns to the power. She has caused anxiety among both parents and students and we have another 59 more months to go. All one can do is to cross their fingers and hope that she will not do something stupid during her tenure (of office)

I pray to almighty that May Allah saves Tamil Nadu from her evil designs (evil deeds and thoughts).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கப்பல் சேவை
posted by hyder (india) [15 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5289

அம்மா அம்மா போதும்மா?.முதலில் இங்குள்ள அகதி முகாம் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.சாலை காக்கா எங்கே உங்கள் சாட்டையடி ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. உளுந்து விழுந்து புரண்டாலும் பச்சை பயிராகாது...!
posted by s.s.md meera sahib (riyadh) [15 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5292

அன்பு நண்பர்களே........ அம்மாவை பத்தி நல்லா தெரிசும் ஓட்டு போட்ட மக்கள்தான் முட்டாள்கள். அம்மா நான் மாறிவிட்டேன் என்று தேர்தலுக்கு முன் சொல்லி ஓட்டு கேட்டார்களா? இல்லையே.. அப்பம் அம்மாவை குறை சொல்லாதீர்கள். ஆனால் உடம்பு முழுவதும் பொய்யி என்பது ஊர்ஜிதம். பதவி பிரமாண்டத்தில் சொன்னது அப்பட்ட பொய்யி.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அம்மா சொல்லை தட்டாதே !
posted by vsm ali (kangxi , Jiangmen, China) [15 June 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 5294

சின்ன வயசுல எங்க " குட்டி " வகுப்பு வாத்தியார் , " அம்மா சொல்லை தட்டாதே " ன்னு பாடம் சொல்லி கொடுத்தார் . அவர் எந்த " அம்மா " வை சொன்னார்னு புரியலையே ?

நேரம் கிடைக்கும்போது , கப்பல் ஏறி போய் கொழும்புவ " சுத்தி " பாக்கலாம்னு இருந்தேன். ஹ்ம்ம் , இப்போ இந்த செய்தியை படித்ததும் , எல்லாம் என் " கெட்ட நேரம் " ன்னு , நொந்து போயிட்டேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சபாஷ் முதல்வர்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [15 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5299

மச்சான் எஸ்.கே.எஸ்.,வாஹித் காக்கா ஆகியோரது கருத்துரைகள் ,ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு வழி அமைத்து தந்திருக்கிறது என்று நம்புகிறேன்.அவர்களுக்கு எனது நன்றி!

ஓர் அரசாங்கம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான இலக்கணங்களாக நண்பர் ஷமீம் அவர்கள் குறிப்பிட்ட எல்லாக் கருத்தும் எனக்கு உடன்பாடானதே! கப்பல் போக்குவரத்து குறித்த மாறுபட்ட செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், மத்திய அரசின் இலாகாவிற்கு உட்பட்ட இந்த விஷயத்தில் அம்மா எங்கிருந்து வந்தார் என்று கேட்டிருந்தது நிஜம். நிற்க!

பெரும்பாலோரது எண்ணத்திற்கு எதிராக கருத்துக்களை வைக்கும்போது ஏற்படும் விளைவுகளை நான் அறிவேன்.அதனால் என்ன, நியாயங்கள் செத்து விடுமா? காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசு,ராணுவத்தின் தவறான நிலைப்பாட்டை சுற்றிக்காட்டியமைக்காக அருந்ததிராய் அவர்கள் தேசத்துரோக வழக்கையும்,நக்சலைட்டுகளுக்கு கருத்தாதரவு தந்தமைக்காக பினாயக்சென் அவர்கள் ஆயுள் தண்டனையையும் சந்திக்கும் காலம் இது.

பிரபாகரனும்,பின்லேடனும் தனிமனிதர்கள்.. ஆனால் ராஜபக்ஷே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் அதிபரே,தன் சொந்தநாட்டு மக்களை துப்பாக்கி,பீரங்கி,கனரக ஆயுதங்கள், போரில் கூட தடை செய்யப்பட பேரழிவு ஆயுதங்கள்,ஆகியவற்றை பயன்படுத்தி,பாது காக்கப்பட்ட பகுதிகள்,பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகளைத்தாக்கியும்,இளைஞர்களின் ஆணுறுப்பை அறுத்து,யுவதிகளை கற்பழித்து, குழந்தைகள் மீது தீச்சூடு வைத்து,முதியவர்களை பூட்ஸ் காலால் நசுக்கி,இவ்வாறாக ஒரு மாதகாலத்திற்குள் ஒரு லட்சம்பேர் கொல்லப்பட்டு ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தினான் என்று சர்வதேச ஊடகங்களும்,ஐ.நா.மாமன்றமும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டின. இதன் பின்னணியில் ஈரம் இல்லாத இந்திய அரசும் இருந்ததாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை குருவி சுடுவதுபோல குண்டுக்கிரையாக்கி,தீவிரவாதிகளை என்கவ்ண்டர் செய்ததாக தம்பட்டமடிக்கும் பாவிகள்தானே!

CHANNEL 4 என்ற ஊடகம் நடந்துமுடிந்த அத்தனை அராஜகத்தையும் ஒளிபரப்பவிருக்கிறது.இந்தச்சூழ்நிலையில் இரத்தக்கறைபடிந்த இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று,தி.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில்,ஒரு மாநில சட்டமன்றத் தீர்மானத்தை மதிக்காமல் மத்திய அரசு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும்போது, தன்மானம் உள்ள ஒரு முதலமைச்சர் அதனைத் தடுக்கமுடியாவிட்டாலும் எதிர்க்கவேண்டும்.அதைத்தான் நெஞ்சுரமும், தைரியமும் கொண்ட நமது முதல்வர் செய்திருக்கின்றார்.இவரைப்போன்று தட்டிக்கேட்க ஒரு நாதியில்லாத காரணத்தால் பாலஸ்தீன முஸ்லிம்கள் படுகின்ற கொடுமைகள் சொல்லி மாளாது.

எந்த விஷயத்தையும் ஆய்வு செய்யாமல் அனுகுபவர்களைக் குறித்த கவலையின்றி,தைரியமாக செயல்படும் முதல்வருக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

கப்பல்போக்குவரத்தால் தென்தமிழகம் வளர்ச்சி அடையும் என்ற கருத்தை வைத்திருக்கும் வாஹித் காக்கா அவர்களே! மலையாள ஊடகவியலாளர்.எஸ்.ஆர்.சுசீந்திரன் அவர்கள்,இந்த வாரம் வர்த்தமானம் மலையாள பத்திரிகையில் எழுதி இருக்கும் கட்டுரையை தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.அதன் பின்னர் தானாகவே தங்களது கருத்து மாறிவிடும். கடந்தமாதம் இலங்கைக்கு சென்றிருந்த போது எனது காதில் விழுந்த குரல்களை நான் இங்கு பதிவு செய்தால்,இந்த இணையத்தளம் கண்ணீரில் கரைந்துவிடும் நண்பர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அறிவுக்கொழுந்துகள் என்றால் என்ன
posted by t.m.rahmatjhullah. (kayalpatnam TEL. 04369280852) [15 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5302

இந்த மாதிரி செய்திஎல்லாம் கேள்வி பட்டால் நம் பழையவர்கள் எல்லாம் "ஹடி பே மட்யா " என்பார்கள் ஆனால் சீனா பாசை யில் கேண்டநீசில் நீ என்ன தந்தா ? என்று அர்த்தம் வரும். என்னசெய்ய நம் தலைனசீப். நம்ம தமிழ் நாட்டு தலைவர்களுக்கு இன்னும் உலக அரசியலறிவில் 'அறிவுக்கொழுந்தாகவே இருக்கிறது "

இது ஏன் சொல்றேனன்றால் இலங்கையில் திருகோணமலை யாழ்பாணம்,காங்கேசன்துறை , தென் கோடி டொந்ட்ராஹெட் போன்ற இடங்களை சைனாக்காரன் அமெரிக்கன் பிரிட்டிஷ் காரன் எல்லாம் கண் வைத்துக்கொண்டே இருக்கிறான் என்பது இந்த அறிவுகொழுது களுக்கு எப்படி தெரியும் ? கைவைத்து விட்டான் என்றால் இந்தியாவில் நிச்சயம் இந்தியாவுக்கு அஷத்துல் அதாபுதான்.அவன் கால் வைத்துவிடுவான் . இதெல்லாம் கவனித்துதான் நம்ம எம் எம் ,ராஜீவ் எல்லாம் இலங்கையை தலாவிகொடுத்து வருகிறார்கள்.

9:51 قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

TMR/KPM 15-62011 WED 12-7-1432


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இனப்படுகொலை
posted by Lebbai (Riyadh) [16 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5313

இதே இந்த முதல் அமைச்சர் தான், இனப்படுகொலை நடக்கும் போது, போரில் பொது மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாது என்ற தொனியில் சொன்னாரே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved