இந்தாண்டு நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி, மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சிகளில் கடைசியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டு எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யும் பணிகள், ஊரக உள்ளாட்சிகளில் பல உறுப்பினர்கள் அடங்கிய வார்டுகளை ஓர் உறுப்பினர் வார்டுகளாக பிரித்தல், இட ஒதுக்கீடு மற்றும் தொடர்புடைய மாற்றங்கள், அதற்கான தேவைகள் குறித்து ஆலோசித்தார்.உள்ளாட்சித் தேர்தலுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றியும், ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்லுக்கு பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷனர் அய்யர் உத்தரவிட்டார்.
மாநில தேர்தல் அலுவலர்களான நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனர் உதயசந்திரன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பேரூராட்சி இயக்ககம் சார்பாக இணை இயக்குனர் ராஜன்துரை கூட்டத்தில் பங்கேற்றனர்.
நன்றி:
தினமலர் (15.06.2011) |