பிரிட்டன் நாட்டு முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் கடந்த ஞாயிறு (ஜூன் 12) அன்று லண்டனில் இருந்து வெளியாகும் Observer Magazine என்ற பத்திரிக்கைக்கு
பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் குர்ஆன் குறித்து கூறிய கருத்து இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், இலங்கை உட்பட உலகளவில் பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Observer Magazine நிருபர் டோனி ஆதம்சுக்கு பல தலைப்புகளில் பேட்டி அளித்த டோனி ப்ளேர் - பல மதங்களை பற்றி அறிந்திருப்பதன் அவசியம்
குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது -
இக்குறுகிய உலகில் அனைத்து மதங்களையும் பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன். தினமும் நான் பைபிள் படிக்கிறேன்.
தினமும் நான் குர்ஆன் படிக்கிறேன். உலகில் நடக்கும் பல விசயங்களை அறிந்து கொள்வதற்கென்று நான் இதனை செய்கிறேன் என்று ஒரு அளவு
கூறினாலும், முக்கிய காரணம் அது பல விசயங்களை கற்று தருவதே ஆகும்.
To be faith-literate is crucial in a globalised world, I believe. I read the Bible every day. I read the Qur'an every day.
Partly to understand some of the things happening in the world, but mainly just because it is immensely instructive.
இப்பேட்டி குறித்து இலங்கை பத்திரிக்கை வீர கேசரி நேற்று வெளியிட்டிருந்த செய்தி ...
அரபு நாடுகள் உள்ளடக்கிய மத்திய கிழக்கு ஆசியாவின் அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாட்டு சபையின் நால்வர் குழுவின்
(Quartet) தூதராக தற்போது டோனி ப்ளேர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு அவர் இஸ்லாத்தினை பற்றியும், குர்ஆனை பற்றியும் Foreign Policy Center என்ற அமைப்பிலும், Reuters செய்தி சேவை
நிறுவனத்திற்கும் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர் கூறியதாவது :-
The Quran is practical and way ahead of its time
The most remarkable thing about reading the Koran in so far as it can be truly translated from the original Arabic - is to
understand how progressive it is.
I speak with great diffidence and humility as a member of another faith. I am not qualified to make any judgements. But as an
outsider, the Koran strikes me as a reforming book, trying to return Judaism and Christianity to their origins, rather as
reformers attempted with the Christian Church centuries later. It is inclusive. It extols science and knowledge and abhors
superstition. It is practical and way ahead of its time in attitudes to marriage, women and governance.
Over centuries it founded an Empire, leading the world in discovery, art and culture. We look back to the early Middle Ages,
the standard bearers of tolerance at that time were far more likely to be found in Muslim lands than in Christian .
1997 முதல் 2007 வரை பிரதமராக இருந்த காலத்தில் மத விசயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்த டோனி ப்ளேர், 2007 இல் கத்தோலிகராக
மாறினார். இவரின் மனைவி செர்ரி பூத்தின் சகோதரி லாரன பூத் அண்மையில் இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
செய்யத் இஸ்மாயில் புஹாரி,
கொழும்பு, இலங்கை.
|