காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, பேரவையின் செயலாளர் யு.ஷேக்னாலெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமதமைப்பின் வருடாந்திர மூன்றாவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ், எதிர்வரும் 18.06.2011 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், இரவு 07.30 மணிக்கு, ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.
நகர்நலன் கருதி நடத்தப்படும் இக்கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும், இச்செய்தியை உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவித்து, அனைத்து காயலர்களையும் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டத்தின் நிறைவில் அனைவருக்கும் சுவைமிக்க இரவு உணவு விருந்துபசரிப்பு நடைபெறவுள்ளது என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |