இன்றிரவு நிகழவுள்ள சந்திர கிரகணம், அக்கிரகணத்தையொட்டி காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நள்ளிரவு 12.00 மணிக்கு நடத்தப்படவுள்ள கிரகணத் தொழுகை அனைத்தும் காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான ஐ.ஐ.எம். டி.வி. மற்றும் அதன் வலைதளத்தில் நேரலை செய்யப்படுகிறது.
இரவு 11.45 மணிக்கு நேரலை துவங்குகிறது. கிரகண காட்சிகள் துவக்கமாக காண்பிக்கப்படவுள்ளன. தொழுகை நடைபெறும்போது தொழுகை காட்சி நேலை செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கிரகணக் காட்சி நேரலையாக காண்பிக்கப்படவுள்ளது.
கிரகணக் காட்சியை நேரலை செய்வதற்காகவும், தொழுகையை நேரலை செய்வதற்காகவும் தனித்தனியே வீடியோ கேமரா நிறுவப்பட்டுள்ளது. www.iimkayal.org என்ற இணைப்பை சொடுக்கி, இன்றிரவு 11.45 மணி முதல் வலைதளத்திலும் நேரலையைக் காணலாம்.
இத்தகவலை, ஐ.ஐ.எம். டி.வி. கட்டுப்பாட்டாளர் எஸ்.அப்துல் வாஹித் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |