நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த பூரண சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நேற்றிரவு (இன்று) 12.00 மணிக்கு காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதிலும், 12.30 மணிக்கு ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா வளாகத்திலும் கிரகணத் தொழுகை நடத்தப்பட்டது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற கிரகணத் தொழுகையை, அப்பள்ளியின் இமாம் ஹாஃபிழ் நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டது. அப்பள்ளியின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரை நிகழ்த்தினார்.
தொழுகையிலும், பேருரையிலும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கிரகணத் தொழுகை மற்றும் கிரகணக் காட்சி ஐ.ஐ.எம். டி.வி.யில் நேரலை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் இயக்கத்தில், கட்டுப்பாட்டாளர் எஸ்.அப்துல் வாஹித், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோர் செந்திருந்தனர்.
ஜாவியாவில் நடைபெற்ற தொழுகையை மவ்லவீ ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் வழிநடத்த, மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ குத்பா பேருரையாற்றினார். |