சென்னையிலுள்ள ஹஜ் இல்லத்தில், தமிழ்நாடு ஹஜ் சொசைட்டி உதவியுடன், இந்திய ஹஜ் குழு பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாமை, அமைச்சர் சின்னையா நேற்று துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த 75 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகளுக்கு பயிற்சியை அளிக்கும் நோக்கில், பயிற்சியாளர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதற்கான, பயிற்சி முகாமை, அமைச்சர் சின்னையா துவக்கி வைத்தார். தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீட்டை அளிக்குமாறு இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலரை, அரசு செயலர் சந்தானம் கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (16.06.2011) |