சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் 18.06.2011 அன்று காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எரிவாயு உருளைகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை - அதாவது, மறுநிரப்புதல் பதிவு செய்வதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் அதிகப்படியான காலதாமதம் / முறைகேடுகள் / நுகர்வோர் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு ஆகிய குறைகள் குறித்து குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எதிர்வரும் 18.06.2011 காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குழுக் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில், எரிவாயு உருளை நுகர்வோர் தங்களது குறைகளை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ, அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் அளித்திடலாம் என பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |