காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்குதல் அதிகளவில் இருந்து வருகிறது. எவ்வளவு வெப்ப வானிலை நிலவினாலும், குற்றால அருவிகளில் சீசனுக்கான நீர் வரத்து துவங்கிவிட்டால் அதன் காற்றும், சாரல் மழையும் அவ்வப்போது காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மக்களை குற்றாலத்திற்கு அழைக்கும்.
தற்போது குற்றாலத்தில் நடப்பு சீசனுக்கான நீர் வரத்து துவங்கியுள்ளதையடுத்து, காயல்பட்டினத்தில் கடும் வெப்ப வானிலைக்கிடையிலும் அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசுவதும், சாரல் - சிறு மழை பொழிவதும் வாடிக்கையாகிவிட்டது.
நன்கு வெயில் அடித்த நிலையில், நேற்று மதியம் 02.15 மணியளவில் காயல்பட்டினத்தில் திடீரென பெரும் துளிகளுடன் மழை பெய்தது. வெகுசில நிமிடங்கள் மட்டுமே பெய்த இம்மழை, நகர வானிலையை சிறிது மாற்றம் செய்துவிட்டு, வந்த வேகத்தில் சென்றுவிட்டது. |