Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:43:20 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6468
#KOTW6468
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 14, 2011
சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2674 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சமச்சீர்கல்வி திட்டத்தை ரத்து செய்து மேலும் மாற்றங்கள் கொண்டு வந்து மேம்படுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர முடியாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ‌சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்‌தது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம். நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.

மேலும் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு அதிகாரிகளும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இரண்டு அதிகாரிகளும், கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் இடம் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர் பாடம் நடத்தலாம் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல்:
தினமலர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாதத்திற்கு மருந்து உண்டு.பிடிவாதத்திற்கு மருந்து இல்லை
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [14 June 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5255

ஹை கோர்ட் & சுப்ரிம் கோர்ட் தீர்ப்புக்கள் வந்த பிறகும் ஜெயா தனது பிடிவாதத்தினை கொஞ்சம் தளர்த்தினால் நல்லது. மாணவ,மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவினை விரைவில் அறிவிக்கடும். வாத்திற்கு மருந்து உண்டு, பிடிவாததிற்கு மருந்து இல்லை.நல்லது எது நடந்தாலும் அதனை நாம் வரவேற்போம் & பாராட்டுவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆளே இல்லாத கடையில யாருக்குய்யா ..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [14 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5259

ஆளே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்தா சொல்லுறீங்க...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கருணாநிதி வச்ச ஆப்பு..!
posted by zubair (riyadh) [15 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5263

பெண்புத்தி பின் புத்தி என்பது நிரூபணம். எல்லாவிசயதிலும் பிடிவாதம் காட்டினால் இதுதான் நடக்கும். திமுக என்னதான் தோற்று போனாலும்.... இந்த ஒருவிசயம் உலகளாவில் பேச அவர்களுக்கு ஊட்ட சத்து. அம்மாக்கோ இந்த ஒன்றே நொந்து வேதனைப்பட போதுமானது. "நாயே ஏன் அடிப்பேனே பீயே ஏன் சுமப்பேனே" என்ற பழம்சொல்லு ஞாபகத்தில் வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பாடம் இல்லாமல் பள்ளிகூடமா ?
posted by M.S.SABDULAZEEZ (Guangzhou) [15 June 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 5274

பாடம் நடத்தாதா பள்ளிக்கு போய் அங்க என்ன கடலைமிடாயா வான்கிதிங்க.....????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. MMK நிலை பாடு என்ன?
posted by mohamed_Abdul Kader (India) [15 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5281

இந்த விசயத்தில் MMK வின் நிலை பாடு என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கொஞ்சம் சிந்தியுங்கள்
posted by mohamed_Abdul Kader (India) [15 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5282

Vote போட்ட வர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்? இனிமேலாவது நலவர்களுக்கு vote போடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தனியார் பள்ளி கூடங்களுக்கு தொடர்ந்து சம்பாதிக்க வாய்ப்பு
posted by Lebbai (Riyadh) [15 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5283

சமச்சீர் கல்விக்கு தடை வாங்குவதற்கு அயராது உழைப்பு என்பது பள்ளி குழந்தைகளின் படிப்பை, மனோநிலையை வெகுவாக பாதிக்கும் செயல்.

தடை செய்வதன் மூலம் தனியார் பள்ளி கூடங்களுக்கு தொடர்ந்து சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக தெரிகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது இரண்டாம் பட்சம்தான்.

பாடங்களில் குழப்பம் என்று வாதத்துக்கு வைத்தாலும், தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கு மட்டும்தான் அது பொருந்தும். அவைகளில் மாத்திரம் விரும்பியவாறு மாற்றி தமிழக அரசு இந்த திட்டத்தை தொடரலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved