ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் இம்மாதம் 26ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் பொருளாளர் சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில், மருத்துவ நிபுணர் குழுவை கொண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான முதலுதவி செயல்முறை பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 26 ஆம் தேதி, நமதூரில் அமைந்துள்ள ஜலாலிய நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமதுரின் புகழ் பெற்ற குழந்தை நல மருத்துவர் டாக்டர் தம்பி அவர்கள் பங்கேற்க உள்ளார்கள். காயல் ஐக்கிய பேரவையின் தலைவர் உவைஸ் ஹாஜியார் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள். ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் அபுல் ஹசன் அவர்கள் இந்த முதலுதவி செயல்முறை பயிற்சி முகாமை நடாத்தி தர இசைந்துள்ளார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே....
நேரம்: காலை 10:00 முதல் பிற்பகல் 01:00 வரை
இடம்: ஜலாலிய நிக்காஹ் மஜ்லிஸ், காயல்பட்டினம்
தேதி: Sunday, 26th June 2011
இந்த நிகழ்ச்சியை www.kayalnews.com, www.kayaltoday.com மற்றும் காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் M.A.K.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி இனிதே நடைபெற உள்ளது, இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |