கேரள மாநிலம் - கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) பொதுக்குழுக் கூட்டத்தை வரும் 19.06.2011 அன்று நடத்துவதென 12.06.2011 அன்று நடைபெற்ற அதன் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் 21ஆவது செயற்குழுக் கூட்டம் 12.06.2011 அன்று காலை 11.15 மணியளவில், அமைப்பின் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மன்றத் தலைவர் மசூது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அமைப்பின் .செயல்பாடுகள் குறித்த செயற்குழு உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - நலத்திட்ட உதவிகள்:
(அ) மன்ற உறுப்பினர் ஒருவரின் தாயாருடைய மருத்துவ செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.20,000 மருத்துவ உதவியாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
(ஆ) மன்ற உறுப்பினர் ஒருவரின் மருத்துவ செலவினங்களுக்காக பண உதவி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 02 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்வரும் 19-06-2011 அன்று மாலை ஐந்து மணிக்கு சகோதரர் நெய்னா காக்கா இல்லத்தின் வைத்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 03 - சாதனை மாணவிக்கு வாழ்த்து:
அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு CBSE தேர்வு முடிவுகளின் படி, கோழிக்கோடு (கேரளா ) ஹில்டாப் மேனிலைப்பள்ளியில் பயின்று, பள்ளியளவில் முதலிடம் பெற்ற - மன்றத்தின் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அவர்களின் மகளைப் பாராட்டி, மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் நினைவு பரிசு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நன்றியுரைக்குப் பின், அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
குறிப்பு : பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உறுப்பினர்கள் அனைவரும் 19.06.2011 அன்று மாலை 05.00 மணிக்கு முன்பாக கூட்டம் நிகழ்விடத்திற்கு வருகை தருமாறு மன்ற நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம். |