உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகம், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலக வளாகத்தில், 13.06.2011 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
அமீரக காயல் நல மன்றம் சார்பாக 75 மாணவ-மாணவியருக்கும்,
தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பாக 30 மாணவ-மாணவியருக்கும்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பாக 25 மாணவ-மாணவியருக்கும்,
ரிதா ஃபவுண்டேஷன் ஃபார் சாரிட்டி சார்பாக 20 மாணவ-மாணவியருக்கும்,
ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பாக 10 மாணவ-மாணவியருக்கும்
பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
ஹாஜி எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதிர் என்ற சின்னலெப்பை, ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி எம்.ஏ.ஜரூக், ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத், ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் தம் கரங்களால் வழங்கினர்.
இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அலுவலக பொறுப்பாளர் மஹ்பூப் ஆகியோர் உடனிருந்தனர்.
பள்ளிப் பாடக்குறிப்பேடுகளை வழங்கிய பல அமைப்புகள் இன்னும் சில தினங்களில் பள்ளிச் சீருடை இலவச வினியோகமும் செய்யவுள்ளன.
இக்ராஃவின், பள்ளிச்சீருடை / பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ்,
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை,
மரைக்கார் பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத் நற்பணி மன்றம் (மஜ்வா),
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - த.மு.மு.க. (காயல்பட்டினம் கிளை),
அன்னை கதீஜா மத்ரஸா,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
ஆகிய அமைப்புகள் ஏற்கனவே பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகத்தை செய்து முடித்துள்ளன. காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகம் சார்பில் வரும் 19ஆம் தேதி பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோக நிகழ்ச்சி நடைபறெவுள்ளது குறிப்பிடத்தக்கது. |