தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு "ரேண்டம் எண்' (சம வாய்ப்பு எண்) வியாழக்கிழமை (ஜூன் 16) வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர 21,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்ப ஆய்வுக்குப் பிறகு, சில விண்ணப்பங்களை நிராகரித்தது போக 20,765 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களை ரேங்க் பட்டியலில் வரிசைப்படுத்த "ரேண்டம் எண்' வழங்கப்படுகிறது. சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org இல் ரேண்டம் எண் விவரத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்ப எண்ணைப் பூர்த்தி செய்து 10 இலக்க "ரேண்டம் எண்ணை' தெரிந்து கொள்ளலாம்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.
தகவல்:
தினமணி |