Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:17:13 AM
செவ்வாய் | 8 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1895, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:19
மறைவு18:04மறைவு22:07
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6512
#KOTW6512
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 17, 2011
நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்: கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3623 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் அக்டோபர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காயல்பட்டின நகராட்சியில் தற்போது 18 வார்டுகள் உள்ளன. இது 23 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றுக்கான புது உறுப்பினர்களும், தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தல்களின் போது தேர்வு செய்யப்படுவர்.

வரும் நகராட்சி எவ்வாறு அமைய வேண்டும், உறுப்பினர்களின் தேர்வில் ஜமாஅத்துகளின் பங்கு என்ன, தேர்வாகும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களிடம் இருந்து நகர மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கவேண்டும் போன்ற விசயங்களை அலசி, ஆய்வு செய்யும் கட்டுரைகள் - 1000 சொற்களுக்கு மிகாமல் - வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகளை ஜூன் 30 க்குள் editorial@kayalpatnam.com என்ற முகவரிக்கு அனுப்பவும். கட்டுரைகளுடன் இணைத்து - கட்டுரை எழுதியவரின் புகைப்படம், அவர் குறித்த சிறு குறிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அனுப்பவும்.

தேர்வாகும் கட்டுரைகள் அனைத்தும் kayalpatnam.com இணையதளத்தில் துவக்கப்பட உள்ள சிறப்பு கட்டுரைகள் பகுதியில் வெளியிடப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் ஐந்து சிறந்த கட்டுரைகள் அச்சிடப்பட்டு நகரில் பொது மக்கள் பார்வைக்கு வினியோகிக்கப்படும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நகர் மன்றம்
posted by சாளை நவாஸ் (singapore ) [18 June 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 5350

செயல் துடிப்பு மிக்க மற்றும் நிர்வாக திறமை கொண்ட தலைவர், மக்களுக்காக உழைக்கும் நல்ல மனம் கொண்ட நகர் மன்ற உறுப்பினர்கள் , ஊழல் அற்ற நிர்வாகம்.. ரொம்ப முக்கியம் என்னன்னா மக்களின் ஒத்துழைப்பு கண்ட கண்ட இடங்களில் குப்பை போடுவது, ரோட்டை அடைத்து மண் ஜல்லி கொட்டுவது (அப்படி கொட்டுவதாக இருந்தால் 2 நாளைக்கு முன்னாடி அறிவிப்பு பலகை வைப்பது) , உங்கள் வீட்டு படியை சுத்தம் செய்யும் பொது இரண்டு அடி தள்ளி உள்ள சாலையும் சுத்தம் செய்யுங்கள். வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள். சுயநலம் என்னும் கொடிய நோயை தவிருங்கள். நம் ஊர் நம் குடும்பம் என்ற பரந்த மனப்பான்மையோடு வாழுங்கள். காயல்பட்டினம் மற்ற ஊர்களுக்கு கலங்கரைபட்டினமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DO IT thru our Masjid
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [18 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5362

ஒவ்வரு மஸ்ஜித் இம்மாம்களை வர்ட் பிரதிநதிகளாக அனுப்பலாமே? .
இது ஒரு நல்ல பாடம் - ஆலிம்கலுக்கு கொடுக்கும் மரியாதை அவர்கள் ஊழல் செய்யமாட்டார்கள்.
இதற்குமேல் ஒரு நல்ல மரியாதையை என்ன வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சின்ன டவுட்...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [18 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5364

அன்பு தம்பி. சாளை நவாஸ், அப்படியே 1000 வார்த்தைக்குள் எழுதி அனுப்பி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அல்லவா. இப்படி answer ஐ அவுட் ஆக்கி விட்டாயே. போப்பா...

Administrator அவர்களுக்கு, நாங்கள் அனுப்பும் கருத்தில் தனிப்பட்ட நபர்களை குறிப்பிட்டு இவர்களை தேர்ந்து எடுத்தால் நல்லது, இவர்களை வேண்டாம் என்று குறிப்பிட்டால் பிரசுரிப்பீர்களா அல்லது வழமை போல கத்திரி போட்டு விடுவீர்களா. குறிப்பிட்டால் நலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்
posted by Administrator (Chennai) [18 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5373

கட்டுரை எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் பெயர்களை பிரசுரிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் ஒருவரை குறிப்பிட்டு இவர் வேண்டாம் என்றால் - எங்களுக்கு மட்டும் அல்ல,
உங்களுக்கும் பிரச்சனையில் முடியும் :௦-)

ஆகவே தாராளமாகவே நீங்கள் விரும்பும் நபரை பரிந்துரைங்கள்; இருப்பினும் ஒருவரை வேண்டாம் என கூற விரும்பும் போது, நபரை குறிப்பிடாமல், எந்த வித குணம்/பழக்க வழக்கம் போன்றவைகளை கொண்டவர் - இப்பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் என குறிப்பிடுவது சிறந்தது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நல்ல முயற்சி
posted by Lebbai (Riyadh) [18 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5375

நல்ல முயற்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நல்ல முயற்சி , அடுத்தவர் மனம் புண்படாமல் இருந்தால் .
posted by MOHAMED NOOHU. MAC (Chennai) [18 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5392

நல்ல முயற்சி, அடுத்தவர் மனம் புண்படாமல் இருந்தால் மட்டுமே. எழுத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக அடுத்தவர் மனம் புண்படும் வகையில் இருக்க வேண்டாமே. ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பபடி, சுதந்திரமான மற்றும் யாருடைய தலையீடும் இல்லாத, மக்களே தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் அதுதான் சரியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இதயத்தைத் திறங்க!
posted by kavimagan kader (dubai) [20 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5431

இப்படி ஒரு கட்டுரையை எழுதத் தூண்டுவது, சமூகத்தின் மீது இந்த இணையதளம் கொண்டுள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.

சமூக சிந்தனை படைத்த ஒவ்வொரு நேயரும், நகரின் எதிர்கால நலனுக்காகவேனும் இதயத்தை திறந்து தத்தம் சிந்தனைகளை எழுதவேண்டும். இதற்கென பெரிய இலக்கிய இலக்கண எழுத்தாற்றல் ஒன்றும் தேவையில்லை. இதயத்தில் படுவதை இணையத்தில் தொட்டால் போதும்.

கவர்ச்சி எழுத்துக்களை விட, கருத்து வலிமைக்கு காயல்.காம் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என நான் நம்புகிறேன். நல்ல கருத்துக்கள் பொதிந்த கட்டுரைகளுள் காணப்படும், எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகளை திருத்தி வெளியிடுவோம் என்ற உறுதிமொழியை, அட்மின் அவர்கள் வழங்குவார்களா? அந்த உத்திரவாதம் அநேகம் பேரை எழுதத் தூண்டலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved